Home One Line P1 நாம் வீ வாக்குமூலம் அளித்தார்- அரசு தரப்பு வழக்கு தொடுக்குமா?

நாம் வீ வாக்குமூலம் அளித்தார்- அரசு தரப்பு வழக்கு தொடுக்குமா?

515
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் சர்ச்சைக்குரிய ரேப் பாடகர் நாம் வீ நேற்று காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

அவரது சமீபத்திய திரைப்படமான ‘பாபி’ படம் தொடர்பாக அவர் விசாரிக்கப்பட்டார்.

“என்னை கைது செய்யாததற்கு நான் அவர்களுக்கு (காவல் துறைக்கு) நன்றி சொல்ல விரும்புகிறேன். இப்போது, அரசு தரப்பு என் மீது வழக்கு தொடுக்குமா என்பதை பார்க்க வேண்டும். நல்லதை எதிர்பார்க்கிறேன், ”என்று அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அவர் மூன்று முறை காவல் துறையினரால் தேடப்பட்டதால், தானாக முன்வந்து மலேசியா திரும்பியதாகவும் அவர் கூறினார். அவரது நேர்மையை அதிகாரிகள் பாராட்டுவார்கள் என்று நம்புவதாகவும், அவர் எந்த தவறும் செய்யாததால் அவர் ஓட வேண்டிய அவசியமில்லை என்றும் நாம் வீ கூறினார்.

அவர் தனது ஏழு நாள் தனிமைப்படுத்தலை முடித்த பின்னர் நேற்று காலை டாங் வாங்கி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.