கோலாலம்பூர்: அகராதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை குறிப்பிடுவதில் “கெலிங்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கத் தவறியதால் பதவி விலகுமாறு டேவான் பகாசா டான் புஸ்தகா (டிபிபி) இயக்குநர் அபாங் சல்லேஹுடின் ஏபி ஷோகரி ஜசெகவின் பி.இராமசாமி கூறியுள்ளார்.
அகராதியின் கடந்த பதிப்பில் இந்த வார்த்தை இணைக்கப்பட்டுள்ளதால் டிபிபி மன்னிப்பு கேட்காது என்று அபாங் சல்லேஹுடின் கூறியதை அடுத்து அவர் இவ்வாறு கூறினார். இந்தியர்களை அவமதிக்கும் எண்ணம் இதற்கு ஒருபோதும் இல்லை என்றும் அவர் கூறினார்.
டிபிபி இயக்குனர் மன்னிப்பு கேட்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இந்த பிரச்சனையை அவர் தற்காப்பது அதிர்ச்சியூட்டும் மற்றும் பொறுப்பற்றது என்றும் இராமசாமி கூறினார்.
“வார்த்தையின் வரலாற்று குறித்து சர்ச்சை இல்லை. ஆனால், அது ஏன் ‘தம்பி ’என்ற வார்த்தையுடன் ஒப்பிடப்பட்டது. ‘தம்பி’ என்பது ஒரு தமிழ் சொல், ஆனால் ‘கெலிங்’என்பது இல்லை.
“இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்பதற்கு அபாங் சல்லேஹுடினுக்கு இன்னும் நேரம் உள்ளது. மன்னிப்பு கேட்பது பலவீனமாகக் கருதப்படக்கூடாது. மாறாக ஒரு பொறுப்பான செயல். அபாங் சல்லேஹுடின் மன்னிப்பு கேட்கத் தவறினால், அவர் தனது பதவியிலிருந்து விலகுவது நல்லது, ”என்று அவர் கூறினார்.