Home One Line P1 விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

641
0
SHARE
Ad

சென்னை: நடிகர் விவேக் நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 16) தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆயினும், இது தடுப்பூசி காரணமாகதா என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் விவேக் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

#TamilSchoolmychoice

விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி இரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.