Home One Line P1 பாஸ் தாராளவாத மலாய் கட்சிகளுடன் ஒத்துழைக்காது

பாஸ் தாராளவாத மலாய் கட்சிகளுடன் ஒத்துழைக்காது

556
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முவாபாக்காட் நேஷனல் அல்லது தேசிய கூட்டணியில் தாராளவாத மலாய் கட்சிகளுடன் ஒத்துழைப்பதை பாஸ் எதிர்க்கிறது என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார்.

எந்தவொரு மலாய்- முஸ்லீம் அரசியல் கட்சியுடனும் பணியாற்றுவதற்காக கட்சியின் தலைமை திறந்திருக்கும், ஆனால், அது தாராளவாத கட்சிகளை பொறுத்துக்கொள்ளாது என்று ஹாடி கூறினார்.

“நாங்கள் தாராளவாத மலாய் அரசியல் கட்சிகளை நிராகரிக்கிறோம். இது முவாபாக்காட் நேஷனல் மற்றும் தேசிய கூட்டணி ஆகியவற்றுக்கும் பொறுந்தும், ” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், இது குறித்து அவர் விரிவாக விளக்கவில்லை.

பாஸ், அம்னோ மற்றும் பெர்சாத்து இடையே தொகுதி ஒதுக்கீடு தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஹாடி, அடுத்த பொதுத் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முன்பு அம்னோ அதன் உள்பிரச்சனைகளைத் தீர்க்க தனது கட்சி காத்திருப்பதாகக் கூறினார்.

இதற்கிடையில் பெர்சாத்துவுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து விவாதித்தாலும் அம்னோவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நிறுத்த பாஸ் முடிவு செய்யவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

“இது இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது, எங்களுக்கு இன்னும் அம்னோவுடன் உறவு இருக்கிறது. நாங்கள் நிறுத்தவில்லை (விவாதிக்கிறோம்), அம்னோவின் உள் பிரச்சனைகள் தீர்க்கப்படாததால் நாங்கள் அதை ஒத்திவைத்தோம்,” என்று அவர் கூறினார்.