Home One Line P2 இண்டியானாபோலிஸ்: துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

இண்டியானாபோலிஸ்: துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

655
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்கா இண்டியானாபோலிஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று காவல் துறை தெரிவித்தது.

பெடெக்ஸ் கட்டிடத்தில் பல துப்பாக்கிச் சூட்டுகளைக் கேட்டதாக சாட்சிகள் கூறினர். ஒருவர் தானியங்கி ஆயுதம் கொண்டு சுட்டதைக் கண்டதாக ஒருவர் கூறினார்.

துப்பாக்கி ஏந்தியவர், தனியாக செயல்பட்டதாகவும், அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்புக்கு மேலும் அச்சுறுத்தல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

“சம்பவம் நடந்த இடத்தில் முதற்கட்ட தேடலுக்குப் பிறகு, உள்ளேயும் வெளியேயும், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒத்த எட்டு பேரை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அந்த எட்டு பேரும் சம்பவ இடத்தில் இறந்துவிட்டனர்,” என்று நகர காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஜெனீ குக் கூறினார்.

கொலைக்கான நோக்கம் இன்னும் தெளிவாக இல்லை.