ஜகார்த்தா: காணாமல் போன இந்தோனிசிய நீர்மூழ்கிக் கப்பல் பாலிக்கு வெளியே உள்ள கடற்பரப்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
முன்னதாக அதிலிருந்த 53 பேரும் மரணமடைந்ததும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை 800 மீட்டர் (2,600 அடி) ஆழத்திற்கு மேல் இருந்து சமிக்ஞைகளைப் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கே.ஆர்.ஐ.நங்கலா 402- இன் படக் காட்சிகளைப் பெற அவர்கள் சிங்கப்பூர் வழங்கிய நீருக்கடியில் நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு வாகனத்தைப் பயன்படுத்தினர்.
கப்பலில் இருந்து அதிகமான பாகங்கள் மீட்கப்பட்டன. அவற்றில் ஒரு நங்கூரம் மற்றும் குழு உறுப்பினர்கள் அணிந்திருந்த பாதுகாப்பு உடைகளும் அடங்கும்.
“கே.ஆர்.ஐ.நங்கலா 402- இன் பாகங்கள் அதில் இருந்தன – அது மூன்று துண்டுகளாக உடைக்கப்பட்டது,” என்று கடற்படைத் தளபதி யூடோ மார்கோனோ கூறினார்.
போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள், இந்த வாரம் பயிற்சிகளின்போது காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் முயற்சிக்கு இட்டுச் சென்றது.