Home நாடு தமிழக முதல்வராகும் ஸ்டாலினுக்கு, விக்னேஸ்வரன் வாழ்த்து

தமிழக முதல்வராகும் ஸ்டாலினுக்கு, விக்னேஸ்வரன் வாழ்த்து

618
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் மே 7-ஆம் தேதி தமிழ் நாட்டின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கலைஞரின் வாரிசாக, மக்களின் நாயகனாக தமிழக மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ள நண்பர் மு.க.ஸ்டாலின் நீண்டகால அரசியல் அனுபவத்தில் தேர்ச்சியான ஆட்சியமைப்பார் என்பதில் சந்தேகமில்லை” என தனது முகநூல் பக்கத்தில் விக்னேஸ்வரன் பதிவிட்டுள்ளார்.