ஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியில் முத்து நெடுமாறன் பங்கேற்பு

    1011
    0
    SHARE
    Ad

    கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ வானவில் 201 அலைவரிசையில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையில் இரவு 9.00 மணிக்கு ஒளியேறும் “ஆஸ்ட்ரோ விழுதுகள் : சமூகத்தின் குரல்” நிகழ்ச்சி பரவலான வரவேற்பை தொலைக்காட்சி நேயர்களிடத்தில் கொண்டிருக்கிறது.

    பலதரப்பட்ட கோணங்களிலான விவாதங்களின் அரங்கேற்றத்தால் இந்த நிகழ்ச்சி அதிகமான பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது.

    இன்று திங்கட்கிழமை இரவு 9.00 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் ஒளியேறும் விழுதுகள் நிகழ்ச்சியில் “இயங்கலையில் கல்வி : பெற்றோர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்” என்ற தலைப்பிலான விவாதம் நடைபெறும்.

    #TamilSchoolmychoice

    இந்த நிகழ்ச்சியில் நாட்டின் முன்னணி கணினித் துறை நிபுணர்களில் ஒருவரான முத்து நெடுமாறன் (படம்) பங்கேற்று தனது கருத்துகளையும், இயங்கலை தொடர்பான தனது தொழில்நுட்ப அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார்.