Home நாடு தொழிலதிபர் லிம் கோக் விங் 75 வயதில் காலமானார்

தொழிலதிபர் லிம் கோக் விங் 75 வயதில் காலமானார்

472
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர் பந்தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலதிபர் லிம் கோக் விங் இன்று காலமானார்.

கிரியேட்டிவ் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் நிறுவனரான அவருக்கு வயது 75. உடல்நலக் கோளாறுகள் காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் காலமானார்.

உறுதிப்படுத்துவதற்காக மலேசியாகினி, பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொண்டதாகவும், உயர்மட்ட நிர்வாகத்திடமிருந்து உறுதிப்படுத்த காத்திருப்பதாகவும் கூறப்பட்டதாக தெரிவித்தது.

#TamilSchoolmychoice

பின்னர் ஓர் அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையை அனுப்புவதாகவும் அவர் உறுதியளித்தார்.

மே 25 அன்று, லிம் தனது வீட்டில் விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தது.