Home நாடு தென்னாப்பிரிக்க பிறழ்வு அதிகமாக இருப்பதால் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

தென்னாப்பிரிக்க பிறழ்வு அதிகமாக இருப்பதால் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

446
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்று வகைகள் மலேசியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பாக பி.1.351 அல்லது தென்னாப்பிரிக்க பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் குறைந்தது ஒரு வகை பிறழ்வு சமூகத்தில் பரவலாக பரவுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு மொத்தம் 119 கொவிட்-19 சம்பவங்களை ‘வேரியண்ட் ஆப் கன்சர்ன்’ (விஒசி) மற்றும் வேரியண்ட் ஆப் இந்தெரெஸ்ட் (விஒஐ) என வகைப்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

மொத்தத்தில், 14 சம்பவங்கள் வெளிநாட்டு நோய்த்தொற்றுகள் ஆகும், மேலும் 105 சம்பவங்கள் உள்ளூர் கண்டறியப்பட்டவை.

மேலும் கருத்து தெரிவித்த நூர் ஹிஷாம், விஒசிகளில் அதிக தொற்று விகிதங்கள் இருப்பது கண்டறியப்பட்டதால், இந்த சூழ்நிலையை ஒவ்வொரு நபரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.