ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்குப் பகுதியில் காவோ உள்ளிட்ட பல நகரங்கள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இப்பகுதியில் பிரான்ஸ் மற்றும் மாலி இராணுவத்தினர் இருவாரங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்த ஆரம்பித்தினர்.
இதற்கு பதிலடியாக, பயங்கரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், காவோ நகரில் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம், பாலம் மற்றும் முக்கியமான பகுதிகள் மீது இராணுவத்தினர் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டு அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இச்சண்டை நேற்று மதியம் வரை நீடித்ததாக பிரான்ஸ் இராணுவச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இத்தாக்குதலில் உயிரிழந்தோர் குறித்த தகவல் தெரியவில்லை.
மேலும் காவோ நகரில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள நிலவரம் குறித்து அறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது