Home நாடு கொவிட்-19; தொடர்ந்து 3-வது நாளாக 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகள் – 9,105

கொவிட்-19; தொடர்ந்து 3-வது நாளாக 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகள் – 9,105

1725
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 11 வரையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 9,105 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 836,296 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநிலங்களைப் பொறுத்தவரையில் முதல் இடத்தில் வழக்கம்போல் சிலாங்கூர் இருக்கிறது. 4,682 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மொத்த தொற்றுகளில் பாதிக்கும் மேற்பட்ட தொற்றுகள் சிலாங்கூரில் பதிவாகியிருக்கின்றன.

சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் கோலாலம்பூர் 1,247 தொற்றுகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மூன்றாவது இடத்தை 541 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பிடித்திருக்கிறது.