Home கலை உலகம் வீட்டில் இருந்தவாறு ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணும் தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள்

வீட்டில் இருந்தவாறு ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணும் தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள்

649
0
SHARE
Ad

வீட்டில் இருந்தவாறு ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணும் மேலும் அதிகமானத் தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள்

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தவாறு, தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக முதல் ஒளிபரப்புக் காணும் திறமையாளர்களுக்கான ரியாலிட்டி நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி மற்றும் விருது நிகழ்ச்சி உட்பட மேலும் அதிகமான பன்னாட்டுத் தமிழ் நிகழ்ச்சிகளை எதிர்ப்பார்க்கலாம்.

மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து இளம் மற்றும் திறமையானப் போட்டியாளர்கள் பங்கேற்கும் ஒரு துடிப்பானப் பாடல் மற்றும் நடனப் போட்டியான ஜீ சேம்ப்ஸ் எனும் முதல் ஒளிபரப்புக் காணும் திறமையாளர்களுக்கான ரியாலிட்டி நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டுக் களிக்கலாம்.

விருது வென்ற இந்தியப் பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ், உள்ளூர் இசையமைப்பாளர், ஷமேஷன், மற்றும் சிங்கப்பூர் பாடகர், கோதா ஆகிய பாடும் பிரிவின் நீதிபதிகளும் இந்திய நடன மாஸ்டர், நந்தா, பிரபல உள்ளூர் கலைஞர், டேனேஸ் குமார் மற்றும் சிங்கப்பூர் நடன மாஸ்டர், பிரேமேலா பாலகிருஷ்ணன் ஆகிய நடனப் பிரிவின் நீதிபதிகளின் மத்தியில் பங்கேற்பாளர்கள் தங்களது படைப்புகளை வழங்குவர். ஜீ சேம்ப்ஸ், ஜூலை 25, மாலை 4 மணிக்கு ஜீ தமிழ் எச்டியில் (அலைவரிசை 223) முதல் ஒளிபரப்புக் காணுகிறது. மேலும், புதிய அத்தியாயங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகும்.

#TamilSchoolmychoice

மறைந்த இசை ஜாம்பவான், எஸ். பி. பாலசுப்பிரமணியம், பங்கேற்கும் உனக்கென்ன மேலே நின்றாய் எனும் இசை நிகழ்ச்சியை அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் கண்டு இரசிக்கலாம். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த, மறைந்த புகழ்பெற்றப் பின்னணிப் பாடகர், எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடிய ஆத்மார்த்தமான மெல்லிசைகளை இவ்விசை நிகழ்ச்சித் தாங்கி மலரும்.

உனக்கென்ன மேலே நின்றாய், ஜூலை 20, மாலை 4 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201) முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

தென்னிந்திய இசைத் துறை நிபுணர்களை அங்கீகரிப்பதற்காக நடத்தப்படும் ஸ்ரீனிவாசன் பி இயக்கிய மிர்ச்சி இசை விருது எனும் விருது நிகழ்ச்சியை அனைத்து வாடிக்கையாளர்களும் கண்டு மகிழலாம்.

கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், கே.எஸ்.ரவிக்குமார், மனோ, அந்தோணிதாசன், அனிருத், ரெஜினா கசாண்ட்ரா, டி. இமான், சிவாங்கி, என்ஜாமி தி எனப் பல புகழ்பெற்றக் கலைஞர்கள் இவ்விருது விழாவில் கலந்துச் சிறப்பித்தனர். மிர்ச்சி இசை விருது, ஜூலை 20, இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 202) முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

முதல் ஒளிபரப்புக் காணும் அனைத்து நிகழ்ச்சிகளையும் வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யலாம். மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.