Home கலை உலகம் ஆஸ்ட்ரோ புதிய அலைவரிசைகளுடன் உள்ளடக்கங்களைப்  புதுப்பிக்கின்றது

ஆஸ்ட்ரோ புதிய அலைவரிசைகளுடன் உள்ளடக்கங்களைப்  புதுப்பிக்கின்றது

701
0
SHARE
Ad

திரைப்பட அலைவரிசைகளான HBO Family, HBO Hits மற்றும் SHOWCASE MOVIES, பொதுப் பொழுதுபோக்கு அலைவரிசைகளான BBC Lifestyle, Paramount Network, Lifetime மற்றும் PRIMEtime, மற்றும் ஆதாரபூர்வமானப் பொழுதுபோக்கு (factual entertainment) மற்றும் இயற்கை வரலாறு அலைவரிசையான BBC Earth ஆகிய புதிய ஆங்கில மொழி லினியர் அலைவரிசைகள் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அறிமுகம் காணவுள்ளன.

• புதிய ஆன் டிமாண்ட் அலைவரிசைகளான, BBC First மற்றும் BBC Brit அக்டோபர் 15 முதல் அறிமுகம் காணவுள்ளன.

• புதிய விளையாட்டு அலைவரிசைகளான, Astro Arena 2, Astro SuperSport 5 மற்றும் SPOTV அக்டோபர் 1, 2021-இல் அறிமுகம் காணவுள்ளன.

#TamilSchoolmychoice

• ஸ்ட்ரீமிங் சேவையை முன்னெடுப்பதற்கான டிஸ்னியின் புதிய உத்தியின் ஒரு பகுதியாகச் செப்டம்பர் 30, 2021-க்குப் பிறகு சில FOX அலைவரிசைகள் கிடைக்கப் பெறாது.

கோலாலம்பூர்: அதிகத் தேர்வுகள், சிறந்த மதிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் ஆஸ்ட்ரோ தனது உள்ளடக்க வழங்கலைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது.

இதற்கு இணங்க, சிறந்த ஸ்ட்ரீமிங் சேவைகளைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பதாகவும் அதே நேரத்தில் குடும்பம் (Family), திரைப்படங்கள் (Movies), பலதரப்பட்ட (Variety), கற்றல் (Learning) மற்றும் விளையாட்டுத் தொகுப்புகளிலுள்ள அதன் லினியர் (linear) அலைவரிசைகளைப் புதுப்பிப்பதாகவும் ஆஸ்ட்ரோ அறிவித்துள்ளது.

அக்டோபர் 15, 2021-இல் அறிமுகம் காணும் HBO Family, HBO Hits, SHOWCASE MOVIES, BBC Lifestyle, BBC Earth, Paramount Network, Lifetime மற்றும் PRIMEtime அலைவரிசைகளும் அக்டோபர் 1, 2021-இல் அறிமுகம் காணும் Astro Arena 2, Astro SuperSport 5 மற்றும் SPOTV விளையாட்டு அலைவரிசைகளும் இந்த லினியர் (linear) அலைவரிசைகளில் அடங்கும்.

அதுமட்டுமின்றி, அதிகப் பிரீமியம் பிரிட்டிஷ் நாடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காக BBC First மற்றும் BBC Brit எனும் மேலும் இரண்டு BBC அலைவரிசைகளை ஆன் டிமாண்ட் இணைக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து எதிர்ப்பார்க்கலாம். ஐந்து தொகுப்புகளிலிருந்து நிறைந்த உள்ளடக்கக் கலவையுடன் ஒரு புதிய விஷயத்தை அனைவரும் எதிர்பார்க்கலாம்.

டிஸ்னி சமீபத்தில் அதன் ஸ்ட்ரீமிங் சேவைகளை முன்னெடுப்பதற்கான உத்தியின் ஒரு பகுதியாக வட்டாரத்தில் சில லினியர் அலைவரிசைகளை நிறுத்துவதாக அறிவித்ததை முன்னிட்டு இந்தப் புதியச் சலுகைகள் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறன. இந்த உலகளாவிய மாற்றத்தின் விளைவாக, ஆஸ்ட்ரோ உட்பட அனைத்து தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தின் கூட்டாளர்களும் டிஸ்னிக்குச் சொந்தமானப் பின்வரும் கிளை (லினியர்) அலைவரிசைகளின் ஒளிபரப்பைச் செப்டம்பர் 30, 2021-க்குப் பிறகு நிறுத்துவர்:

FOX, FOX Life, FX, FOX Movies, FOX Action Movies, FOX Family Movies, FOX Sports, FOX Sports 2, FOX Sports 3, மற்றும் Nat Geo People. அதுமட்டுமின்றி, ஆஸ்ட்ரோவின் ஆங்கிலப் பொழுதுபோக்குப் பிரிவின் உள்ளடக்கத்தைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, Discovery Science மற்றும் Hello அலைவரிசைகள் செப்டம்பர் 30, 2021-க்குப் பிறகு கிடைக்கப் பெறாது.
லினியர் முதல் ஸ்ட்ரீமிங் தளங்கள் வரை ஊக்கமளிக்கும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியைச் செயல்படுத்திய ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் மேலும் அதிகமானப் பொழுதுபோக்குகளை இச்செயலியில் ஸ்ட்ரீம் செய்வதோடு இதில் கிடைக்கப் பெறும் FOX அலைவரிசைகளிலிருந்துப் பெரும்பாலான உள்ளடக்கங்களைத் தொடர்ந்து கண்டு மகிழலாம்.

ஆஸ்ட்ரோவின் வணிகப் பிரிவு இயக்குநர், அஸ்லின் அர்ஷாத் கூறுகையில், “எங்களின் தயாரிப்பு வழங்கல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை வலுப்படுத்த ஆஸ்ட்ரோ ஒரு பயணத்தில் உள்ளது. எப்போதும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன் வாடிக்கையாளர்களின் பல்வேறுப் பொழுதுபோக்கு மற்றும் தகவல் தேவைகளைப் பூர்த்திச் செய்ய நாங்கள் தொடர்ந்து விரிவானத் தேர்வுகளை வழங்குவதை எங்களின் உள்ளடக்கப் புதுப்பிப்பு உறுதிச் செய்கிறது” என்று கூறினார்.

“பயனர்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளின் தற்போதைய மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, எங்களின் உள்ளடக்கச் சலுகையை விரிவுப்படுத்துவதற்கான எங்கள் நோக்கத்துடன், பிரபலமான மற்றும் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இப்புதிய அலைவரிசைகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். விளையாட்டு இரசிகர்கள் 3 புதிய அலைவரிசைகளை எதிர்பார்க்கலாம் :

Astro Arena 2, Astro SuperSport 5 மற்றும் SPOTV.

Astro Arena-இன் புகழை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, Astro Arena 2 இளமையான இரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் WWE, BWF-க்கானப் புதுப்பிக்கப்பட்ட உள்ளூர் விளையாட்டு ஒளிப்பரப்பு மற்றும் நேரலை ஸ்டுடியோ விளக்கக் காட்சிகளைக் கொண்டு வருவதோடு புதிய வடிவ நிகழ்ச்சிகளை வழங்கவும் உறுதியளிக்கிறது.

விளையாட்டு இரசிகர்கள் தொடர்ந்து ஆஸ்ட்ரோவில் மேலும் அதிகமான நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க, UFC மற்றும் Formula 1 நிகழ்ச்சிகளை Astro SuperSport 5 வழங்கும், MotoGP, Wimbledon, US Open நேரலை நிகழ்ச்சிகளை SPOTV வழங்கும்.

“ஸ்ட்ரீமிங் உலகின் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்திச் செய்ய, ஆஸ்ட்ரோ கோ, HBO GO iQIYI, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் மிகச் சமீபத்திய TVB Anywhere+ ஆகிய எங்களின் செயலிகளில் பதிவு செய்து மேலும் விரிவான உள்ளடக்கத்தைக் கண்டு களிக்குமாறு எங்களின் வாடிக்கையாளர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான எங்களின் தொடர்ச்சியானப் பயணத்தின் ஒரு பகுதியாக, எங்கள் தொகுப்புகளில் அதிகத் தேர்வுகள், மதிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்” என்றும் அஸ்லின் அர்ஷாத் தெரிவித்தார்.

நள்ளிரவு 12, செப்டம்பர் 15, 2021 முதல் டிவி மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் புதிய அலைவரிசைகள் கிடைக்கப் பெறும். மேல் விபரங்கலுக்கு, astro.com.my/newchannels எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

பின் இணைப்பு

குடும்பத் தொகுப்பு :

Lifetime (அலைவரிசை703) பெண்களை மையமாகக் கொண்ட, ஊக்கமளிக்கும் உண்மையான நபர்களைப் பற்றியத் தனித்துவமானக் கதைகளுக்குப் பெயர் பெற்றப் பொழுதுபோக்குத் தளம். பிரிட்டிஷ் அரசக் குடும்பத்திலிருந்து விலகுவதற்காகப் புகழ்பெற்ற ஜோடியின் வழக்கத்திற்கு மாறானச் செயலின் விபரங்களை வழங்கும், மிகவும் எதிர்பார்க்கப்பட்டத் திரைப்படங்களில் ஒன்றான Harry & Meghan: Escaping The Palace, Lifetime அசல் நிகழ்ச்சிகளின் Ann Rule’s Sleeping with Danger மற்றும் விசி ஆண்ட்ரூவின் திரைப்படங்கள்.

PRIMEtime (அலைவரிசை704) மார்வெல்லின் Agents of S.H.I.E.L.D., Riviera, Law & Order: Special Victims Unit, Criminal Minds, MasterChef, Keeping Up with the Kardashians உட்பட தொடர் பிரியர்களுக்கு மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

திரைப்படத் தொகுப்பு:

HBO Hits (அலைவரிசை 415)

தேர்வு செய்யப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் Minions, Kong: Skull Island மற்றும் Roald Dahl’s The Witches!

HBO Family (அலைவரிசை 414)

Jumanji திரைப்படத் தொடர்கள், Happy Halloween, Scooby-Doo!, Scooby-Doo! The Sword And The Scoob!, Hotel Transylvania 3: Summer Vacation, Superman Returns போன்றக் குடும்பத்தினருக்கு விருப்பமானப் பல நிகழ்ச்சிகளைக் கண்டுக் களியுங்கள்.

SHOWCASE MOVIES (அலைவரிசை 413)

The Avengers, Doctor Strange, Thor, Captain America: Civil War, Star Wars: The Force Awakens, The Maze Runner, Pirates of the Caribbean, Percy Jackson, The Transporter, உட்பட டிஸ்னி மற்றும் FOX-லிருந்துப் பல நிகழ்ச்சிகள்.
பலதரப்பட்டத் தொகுப்பு:

Paramount Network (அலைவரிசை 713)

அமெரிக்காவில் இருந்து விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட நிகழ்ச்சிகள், முத்திரைப் பதித்த அறிவுசார் உடைமைகள் (IP) மற்றும் விவேக நிகழ்ச்சிகளுக்குப் பெயர் பெற்றது. The Daily Show with Trevor Noah, Awkwafina is Nora from Queens மற்றும் CSI: Cyber உட்பட விருது வென்ற நிகழ்ச்சிகளைத் தொடக்கமாகக் கண்டு மகிழுங்கள்.

BBC Lifestyle (அலைவரிசை-717)

உங்கள் வாழ்க்கையை மாற்றத் துடிப்பான, புதிய மற்றும் ஊக்கமளிக்கும் ஆலோசனைகளால் நிரம்பியுள்ளது, BBC Lifestyle. நிஜெல்லா லாசனின் Cook, Eat Repeat, கோர்டன் ராம்சே, ஜேமி ஆலிவர், ஜார்ஜ் கிளார்க் மற்றும் பிரபலமான Bake Off: The Professionals S4 உள்ளிட்டப் பிடித்த ஆளுமைகளை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகிறோம்.

கற்றல் தொகுப்பு:

BBC Earth (அலைவரிசை554) BBC Earth நமதுப் பிரபஞ்சத்தின் நம்பமுடியாத மற்றும் மனதைக் கவரும் அதிசயங்களைப் பகிர்ந்து இரசிகர்களை ஊக்குவிக்கிறது. Eden, the Untamed Planet and Artic Life: A Year in Ice மற்றும் பல முக்கிய நிகழ்ச்சிகளில் அடங்கும்.

விளையாட்டுத் தொகுப்பு:

Astro SuperSport 5 (அலைவரிசை815)

UFC, Formula 1
SPOTV (அலைவரிசை816) MotoGP, Wimbledon, US Open
Astro Arena2 (அலைவரிசை802) WWE, BWF-க்கானப் புதுப்பிக்கப்பட்ட உள்ளூர் விளையாட்டு ஒளிப்பரப்பு மற்றும் நேரலை ஸ்டுடியோ விளக்கக்காட்சிகளைக் கொண்டுவருவதோடுப் புதிய வடிவ நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

ஆன் டிமாண்ட்:

BBC First ஒளிப்பதிவுக் கருவிக்கு முன்னால் மற்றும் அதற்குப் பின்னால் பிரீமியம் பிரிட்டிஷ் நாடகத்தின் விருது வென்றத் திறமையாளர்களைச் சித்தரிக்கின்றது.

Killing Eve, Luther மற்றும் Doctor Foster உட்படச் சிறந்த பிரிட்டிஷ் பிரீமியம் நாடகங்களை BBC First வழங்குகிறது.

BBC Brit புத்திசாலித்தனமான ஆனால் பணிவற்ற, உண்மை ஆனால் வேடிக்கையான, நிபுணர்களுடன், நகைச்சுவையான விசித்திரப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை BBC Brit வழங்குகிறது. Top Gear உட்பட Uncle மற்றும் Mr Bean போன்றப் பல்வேறு வகையான இரசிகர்களின் விருப்பங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளின் இல்லம் BBC Brit .


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal