Home இந்தியா தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் : ஸ்டாலினுக்கு சவால்!

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் : ஸ்டாலினுக்கு சவால்!

660
0
SHARE
Ad

சென்னை : தமிழ்நாடு முதல்வராக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் எனப் பாராட்டுகள் ஒருபுறம் குவிந்து வருகின்றன. அதே வேளையில் செயல்படுத்த முடியாத நீட் தேர்வு போன்ற பல திட்டங்களை அறிவித்துவிட்டு இப்போது சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.

திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே, அதிமுக மீண்டும் புத்தெழுச்சியுடனும், சுறுசுறுப்புடனும் போராட்டக் களத்தில் குதித்திருக்கிறது. திமுகவுக்கு எதிராக கேள்விக் கணைகளைத் தொடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில்தான் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின்போது, கடந்த 2019-ஆம் ஆண்டில் கீழ்க்காணும் மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன:

1. காஞ்சிபுரம்

2. செங்கல்பட்டு

3. நெல்லை

4. தென்காசி

5. கள்ளக்குறிச்சி

6. விழுப்புரம்

7. ராணிப்பேட்டை

8. வேலூர்

9. திருப்பத்தூர்

இதனால் இந்த மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன.

சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மேற்கண்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தது.

இந்த ஒன்பது மாவட்டங்களிலும் வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கியது.

இந்த உள்ளாட்சித் தேர்தல் திமுகவுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடுமையான சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்திருக்கின்றன.

ஆனால், பாமக, விஜயகாந்தின் தேமுதிக, சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.

நடிகர் விஜய் இரசிகர் மன்ற அமைப்புகளும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றன.

இந்த சூழ்நிலையால் திமுக இந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தோல்வியடைந்தால் அது கட்சிக்கும், ஸ்டாலின் தலைமைத்துவத்திற்கும் கடுமையான பின்னடைவாகப் பார்க்கப்படும்.


Join us on our Telegram channel for more news and latest updates:https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal