Home கலை உலகம் தலைவா படத்தில் விஜய்யின் கதாபாத்திரம்

தலைவா படத்தில் விஜய்யின் கதாபாத்திரம்

558
0
SHARE
Ad

vjசென்னை, ஏப்ரல் 22- கொலிவுட்டில் மதராசப்பட்டினம் படத்தின் இயக்குனர் விஜய் இயக்கத்தில், நாயகன் விஜய் நடித்து வரும் படம் தலைவா.

இந்த படத்தின் சில புகைப்படங்களில் பாட்ஷா ரஜினி பாணியில் விஜய் காட்சி கொடுத்ததால், அப்படம் அரசியல் பின்னணியில் உருவாகியிருக்கலாம் என்று கணித்தார்கள்.

இப்படத்தின் தலைப்பு தலைவா என்று இருப்பதால் இதனை நம்பாமலும் இருக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஆனால், இப்போது அப்படத்தில் விஜய் என்னவாக நடிக்கிறார் என்கிற தகவலை ஆராய்ந்த போது, அவர் தமிழ்ப்பசங்க என்றொரு நடனக்குழுவுக்கு தலைவர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

பல ஊர்களுக்கு, நாடுகளுக்கு சென்று நடன நிகழ்ச்சி நடத்துவது தான் அவர்களது வேலையாம். மேலும், இந்த படத்தில் தமிழ்ப்பசங்க என்றொரு பாடலும் உள்ளதாம்.

தனது நடனக்குழுவின் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள இப்பாடலை அஸ்திரேலியா சென்று படமாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன