Home அரசியல் “சே ஜோஹான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்” இப்ராகிம் அலி அம்னோவிடம் வேண்டுகோள்

“சே ஜோஹான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்” இப்ராகிம் அலி அம்னோவிடம் வேண்டுகோள்

816
0
SHARE
Ad

ibrahim-ali-slider பாசிர் மாஸ், ஏப்ரல் 22- தேசிய முன்னணியால் பாசிர் மாஸ் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சே ஜோஹான் சே பா, கடந்த சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வராதது குறித்து அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று பெர்க்காசா தலைவர் இப்ராகிம் அலி அம்னோ ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், சே ஜோஹான் வேட்புமனு தாக்கல் செய்ய வராததால், உண்மையில் தேசிய முன்னணிக்கு நன்மை தான் கிடைத்துள்ளது. எனவே அவரை அம்னோ மன்னித்து அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று பாசீர் மாஸ் பகுதியில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் இப்ராகிம் அலி தெரிவித்தார்.

கடந்த வாரம் தேசிய முன்னணி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று கூறி மிகுந்த வருத்தம் தெரிவித்த இப்ராகிம் அலி, அதன் பின் பாசீர் மாஸ் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும் நோக்கில் தான் சுயேட்சையாகக் களமிறங்கப்போவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இன்னும் மலேசிய மக்கள் அறியாமையில் இருப்பதாக நினைத்து, இது போன்ற அரசியல் நாடகங்களை நடத்தி கொண்டிருக்கிறது அம்னோ. ஆனால் மக்கள் தாங்கள் என்றோ விழிப்புணர்வு பெற்றுவிட்டோம் என்பதை வருகிற பொதுத்தேர்தலில் தங்கள் வாக்குகள் மூலம் நிரூபிப்பார்கள் என்பது உறுதி.