Home இந்தியா சாகித்திய அகாடமி விருதுகள் பெற்ற படைப்புகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஸ்டாலின் வாழ்த்து

சாகித்திய அகாடமி விருதுகள் பெற்ற படைப்புகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஸ்டாலின் வாழ்த்து

798
0
SHARE
Ad

சென்னை : ஆண்டுதோறும் இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புகளை சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.

மொழிபெயர்ப்புகளுக்கும் இத்தகைய சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த முறை சாகித்திய அகாடமி விருது பெறும் தமிழ் படைப்புகள், தமிழ் எழுத்தாளர்களுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“உலக இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை உலகெங்கும் எடுத்துச் செல்லும் அறிவுப் பண்டமாற்று என்பது பெரும்பணி – அரும்பணி! அத்தகைய அரும்பணியில், மொழிபெயர்ப்புக்கான #SahityaAkademi விருது, வங்கத்துக் கவிஞர் தாகூரின் புதினத்தைத் தமிழில் வடித்துள்ள முனைவர் கா.செல்லப்பன்; உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்தியில் மொழி பெயர்த்துள்ள இராகவன்; கவிஞர் சல்மா அவர்களின் இரண்டாம் ஜாமங்களின் கதை புதினத்தை மராத்தியில் மொழிபெயர்த்துள்ள சோனாலி நவாங்குள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள் – பாராட்டுகள்!” என ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal