Home உலகம் நரேந்திர மோடி – கமலா ஹாரிஸ் சந்திப்பு

நரேந்திர மோடி – கமலா ஹாரிஸ் சந்திப்பு

671
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க துணையதிபர் கமலா ஹாரிசும் நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 23) சந்திப்பு நடத்தி பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

அவர்களின் விவாதங்களில், ஆப்கானிஸ்தான், கொவிட்-19 நிலவரம் ஆகியவை அடங்கியிருந்தன.

தங்களின் சந்திப்பில், சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை வாய்ந்த , அதே வேளையில் அனைத்துத் தரப்புகளையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் வட்டாரம் உருவாக்கப்பட இரு தரப்புகளும் தங்களின் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தினர்.

#TamilSchoolmychoice

கொவிட்-19 தொடர்பில் இரு நாடுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகள், அந்த தொற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள், தடுப்பூசித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படுவது, முக்கிய மருந்துகளின் விநியோகம், சுகாதாரக் கருவிகளின் பயன்பாடு ஆகிய அம்சங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

அமெரிக்காவில் நடைபெறும் குவாட் எனப்படும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சந்திப்புக் கூட்டத்தில் மோடியும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றுள்ள மோடி அங்கு கமலா ஹாரிசைச் சந்தித்ததோடு, மேலும் பல தொழிலதிபர்களையும் சந்தித்தார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal