Home கலை உலகம் ‘ராகாவில் முதல்வன்’ – சமூக முயற்சிகளுக்காக கைகோர்க்கும் ராகா- உள்ளூர் திறமையாளர்கள்

‘ராகாவில் முதல்வன்’ – சமூக முயற்சிகளுக்காக கைகோர்க்கும் ராகா- உள்ளூர் திறமையாளர்கள்

937
0
SHARE
Ad

  • ஊக்கமளிக்கும் சமூக முயற்சிகளுக்காக ராகா- உள்ளூர் திறமையாளர்கள் கைக்கோர்க்கின்றனர்

‘ராகாவில் முதல்வன்’ பற்றிய விபரங்கள்:

• ‘ராகாவில் முதல்வன்’ மூலம் பல்வேறு ஊக்கமளிக்கும் முயற்சிகளின் வழி உள்ளூர் சமூகங்களுக்குப் பயனளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மலேசியாவின் முதல் தரத் தமிழ் வானொலிப் பிராண்டான ராகா, உள்ளூர் திறமையாளர்களுடன் கைக்கோர்க்கின்றது.

#TamilSchoolmychoice

புகழ்பெற்றப் பாடகர் மற்றும் பாடலாசிரியருமானப் புனிதா ராஜா, பிரபலமான உள்ளூர் திறமையாளர்- தொலைக்காட்சித் தொகுப்பாளரானச் செயிண்ட் டி.எஃப்.சி., வணிகம் செய்யும் மற்றும் பிரபலச் சமையல்காரரானச் சாந்தி ராஜ் பார்; மற்றும் நடிகர் மற்றும் உள்ளடக்க உருவாக்குபவரான டேவியு புவனன் ஆகிய சமூக வலைத்தளங்களில் செல்வாக்குமிக்கவர்கள் (influencers) ராகாவின் அகப்பக்கத்தின் வாயிலாக இறுதிச் சுற்றுப் பங்கேற்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

• இந்தப் பிரச்சாரத்தின் மூலம், உள்ளூர் சமூகங்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு மாதக் காலப் பிரச்சாரத்தைத் தொடங்க ஒவ்வொரு உள்ளூர் திறமையாளர்களுக்கும் ராகா சுமார் 1000 ரிங்கிட் வழங்கியது.

• பின்வருபவற்றை உள்ளடக்கிய இம்முயற்சிகள் அக்டோபர் 17, 2021 வரைத் தொடரும்:

o புனிதா ராஜா – தேர்ந்தெடுக்கப்பட்டத் தனித்து வாழும் தாய்மார்கள் வணிகத் தளங்கள் அமைக்க உதவுவதோடு அவர்கள் தங்களின் வணிகங்களுக்காகச் சமூக ஊடகங்களைச் செவ்வெனப் பயன்படுத்தப் பயிற்சிகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

o செயிண்ட் டி.எஃப்.சி. – உதவித் தேவையானவர்களுக்கு உதவப் பல்வேறுச் சிறிய மற்றும் நடுத்தர நிறுவன உரிமையாளர்களுடன் ஒத்துழைப்பில் ஈடுப்படுகிறார்.
o சாந்தி ராஜ் பார் – ஒரு செயற்கைக் கால் தேவைப்படும் மாற்றுத்திறனாளிக்கு அதனைப் பெற்றுத் தரவும் பல்வேறுக் கட்டணங்களைச் செலுத்த உதவித் தேவைப்படும் ஒரு குடும்பத்திற்க்கு உதவவும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்.

o டேவியு புவனன் – ஒர் ஆதவற்றோர் இல்லத்தைச் சீரமைத்தல் மற்றும் அங்கு வசிக்கும் குழந்தைகளுக்கானப் பள்ளித் தேவைகளைப் பூர்த்திச் செய்தல் ஆகிய முயற்சிகளில் ஈடுபடுகிறார்.

• ராகா அறிவிப்பாளர்களான அகிலா, சுரேஷ், ரேவதி, உதயா, மற்றும் கோகுலன் ஆகியோருடன் உள்ளூர் கலைஞர்களான ஷேன் எக்ஸ்ட்ரீம் மற்றும் செயிண்ட் டி.எஃப்.சி ஆகியோர் இடம் பெரும் கவர்ச்சியான ‘ராகாவில் முதல்வன்’ தலைப்புப் பாடலை இரசிகர்கள் ராகா யூடியூப் அலைவரிசை வழியாக ஸ்ட்ரீம் செய்யலாம்.

• இந்த சமூக முயற்சிகளைப் பற்றிய மேல் விபரங்களுக்குப் பின்வருபவற்றை வலம் வரவும்:

o ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் & சமூக வலைத்தளங்கள் (முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் யூடியூப்)

o உள்ளூர் திறமையாளர்களின் சமூக வலைத்தளங்கள்

  • புனிதா ராஜா (முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்)
  • செயிண்ட் டி.எஃப்.சி (முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் மற்றும் டிக்டாக்)
  • சாந்தி ராஜ் பார் (முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம்)
  • டேவியு புவனன் (இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் டிக்டாக்)வானொலியில் கேளுங்கள்: