Home நாடு பெர்காசாவின் இரு வேட்பாளர்கள் நியமனம் -மகாதீரின் கை ஓங்கியுள்ளதே காரணம்!

பெர்காசாவின் இரு வேட்பாளர்கள் நியமனம் -மகாதீரின் கை ஓங்கியுள்ளதே காரணம்!

658
0
SHARE
Ad

Ibrahim Aliகோலாலம்பூர் ஏப்ரல் 23- தேசியமுன்னணி, பெர்காசாவின் துணைத்தலைவர் சுல்கிப்ளியை ஷா ஆலாமில் களமிறக்கியதற்கும், பாசிர் மாஸ் வேட்பாளராக அம்னோ சார்பாக முன்மொழியப்பட்டவர் பெர்காசாவின் தலைவர் இப்ராஹிம் அலிக்காக விலகியுள்ளதற்கும், பின்னணியில் முன்னாள்  பிரதமரும், அம்னோவின் முன்னாள் தலைவருமான டாக்டர் மகாதீரின் முழுமையான அதிகாரம் ஓங்கியுள்ளது நன்கு புலனாகிறது.

#TamilSchoolmychoice

இன்று கேலாங்பாத்தாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுபற்றிக் கருத்துரைத்த லிம் கிட் சியாங், ஒரு நாள் அவர் இப்ராகிம் அலியை பிரதமராகக் கூட ஆக்கக்கூடும் என்றார்.

தேசியமுன்னணியின் மற்ற துணைக் கட்சிகளும் வலுவிழந்து, செயல்பட முடியாதவர்களாகவும் அம்னோவின் அதிகாரத்திற்கு ஈடுகொடுக்க பொருத்தம் இல்லாதவர்களாகவுமே காணப்படுவதாகவும் கிட் சியாங் தெரிவித்தார்.

மேலும் பெர்காசாவைப் பொறுத்தவரை அது தேசியமுன்னணியுடன் இணையும் 14-வது உறுப்புக்கட்சி என்பது வெளிப்படையாகவே தெரிகிறது என்பதோடு இவ்விஷயத்தில் மசீசா, கெரக்கான் மற்றும் தேசியமுன்னணியின் மற்ற உறுப்புக்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்றும்,  பெர்காசா அதிகாரப்பூர்வமற்ற முறையில் தேசியமுன்னணியுடன் இணைவதை  அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்றும். லிம் கேள்வி எழுப்பினார்.

இப்ராகிம் அலியை பிரதமராக்குவார் மகாதீர்

இப்ராகிம் அலியை போன்றவர்கள் நிறைய பேர் மலேசியாவைக் காக்கத் தேவைப்படுவதாக மகாதீர் குறிப்பிட்ட தகவல் ஒன்றை மேற்கோள்காட்டிய லிம், ஒருவேளை நஜிப் மற்றும் மொய்தீனை விட அலி தகுதியானவர் என்கிறாரோ என்றும் கேள்வி எழுப்பினார்.

மகாதீரைப் பொறுத்தவரை ஒரு பிரதமருக்குரிய முழுத்தகுதியும் இப்ராகிம் அலிக்கு இருக்கிறது என்பதே அவர் கருத்து என்றும் அம்னோ அவரின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதால் ஒரு நாள் அவர் இப்ராகிம் அலியை பிரதமராக அறிவிக்கலாம் என்றும் கிட் சியாங் தெரிவித்தார்..

கடந்த சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கலின் போது, பாசிர்மாஸ் தொகுதியில் முன்னதாக தேசிய முன்னணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சே ஜோஹான்  வேட்பு மனுத் தாக்கல் மண்டபத்தில் இருந்தும், கடைசி நேரத்தில் பாஸ் கட்சியை எதிர்த்து இப்ராஹிம் அலி போட்டியிட ஏதுவாக தான் வேட்புமனு தாக்கல் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டது அம்னோவின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்று ஜசெகவின் தேசிய பொது உறவு செயலாளர் டோனி புவா பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

பாஸ் வேட்பாளராக ஒரு கிறிஸ்த்துவர்

“ஆனால் பாஸ் கட்சியோ இதுவரை நிகழாத ஒன்றாக, ஆயர் ஹீத்தாமில் ஒரு கிறிஸ்த்துவரை பாஸ் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது என்றவர் அம்னோ சீனரையும், மசீச மலாய்க்காரரையும் வேட்பாளராக நிறுத்தும் நாளை நாமெல்லாம் பார்க்க முடியுமா? அதுதான் தேசியமுன்னணிக்கும் மக்கள் கூட்டணிக்கும் உள்ள வித்தியாசம்” என்று புவா கூறினார்.