Home கலை உலகம் ஆஸ்ட்ரோ வானொலி : 60 புதிய இயங்கலை வானொலி நிலையங்கள் – மற்ற அம்சங்களுடன் SYOK...

ஆஸ்ட்ரோ வானொலி : 60 புதிய இயங்கலை வானொலி நிலையங்கள் – மற்ற அம்சங்களுடன் SYOK செயலியை புதுப்பிக்கிறது

636
0
SHARE
Ad

60 புதிய இயங்கலை வானொலி நிலையங்கள் மற்றும் பல அம்சங்களுடன் SYOK செயலியை ஆஸ்ட்ரோ வானொலி புதுப்பிக்கிறது

கோலாலம்பூர் : SYOK செயலியைப் புதுப்பித்துத் தனது உருமாற்றப் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் ஆஸ்ட்ரோ வானொலி தனது 25-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. நவம்பர் 1, 2021 முதல், பல்வேறு வகையான இசைத் தொகுப்புகளை வழங்கும் 60-க்கும் மேற்பட்டப் புதிய இயங்கலை வானொலி நிலையங்களையும் சமீபத்தியச் செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்களை வழங்கும் ‘YOU-NEIRONG’ என்றப் புதியச் சீனச் செய்தி அலைவரிசையையும் மலேசியர்கள் எதிர்பார்க்கலாம்.

70கள், 80கள் மற்றும் 90கள், ராக் (rock), ஜிவாங் (Jiwang), சின்டன் (Cintan), நசித் (Nasyid), அரபு (Arabic), பாலிவுட் பாடல்கள், இராமா மலேசியா (Irama Malaysia), டங்டுட் (Dangdut) மற்றும் பலவற்றிலிருந்துப் பாலாட்கள் (ballads), கிளாசிக்ஸ் (classics), ஒலி இசை (acoustic music), நடன இசை, பயிற்சி இசை (workout music), கே-பாப் (K-pop), ஹிப்-ஹாப் (hip-hop) உள்ளிட்ட பல மொழிகளில் தங்களுக்குப் பிடித்த இசை வகைகளை SYOK-இல் பயனர்கள் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யப் புதிய நிலையங்கள் அனுமதிக்கின்றன.

#TamilSchoolmychoice

வானொலியிலும் தொலைக்காட்சியிலும் கிடைக்கப்பெறும் ERA, MY, HITZ, ராகா, SINAR, GEGAR, ZAYAN, MELODY, GOXUAN, MIX, LITE உள்ளிட்ட அனைத்து ஆஸ்ட்ரோ வானொலி வணிக முத்திரைகளுக்கு (பிராண்டுகளுக்கு) மத்தியில் இந்த 60 புதிய இயங்கலை வானொலி நிலையங்கள் கூடுதலாகக் கிடைக்கப் பெறுவது, ஆஸ்ட்ரோ வானொலி மற்றும் SYOK ஆகியவை மலேசியாவில் முதலாவதாக ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலானப் புதிய இயங்கலை வானொலி நிலையங்களை அறிமுகப்படுத்தியதைக் குறிக்கிறது.

‘இருண்டப் பயன்முறை’ (dark mode); பயனர்கள் தங்களுக்கு விருப்பமான வானொலி நிலையத்தைத் தானாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யத் திட்டமிட அனுமதிக்கும் ‘அலாரம்’ அம்சம்; கலந்துரையாடல் மூலம் நேரலைக் காணொளி அங்கத்தின் போதுப் பயனர்கள் பிறருடன் தொடர்புக் கொள்ளும் திறனை வழங்கும் ‘நேரலை காணொளி’ அலைவரிசை; மற்றும் ஒலிப்பெட்டகங்கள் மத்தியில் – வகைகளின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட ஒலிப்பெட்டகங்களைத் தேட உதவுதல், பயனர்கள் தாங்கள் நிறுத்திய இடத்தில் இருந்துத் தொடர்ந்து ஸ்ட்ரீமிங் செய்ய உதவுதல், பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒலிப்பெட்டகங்களைக் கோப்புறைகளில் ஒழுங்கமைக்க உதவுதல், சமூக ஊடகங்களில் பகிர உதவுதல் ஆகியப் பல அற்புதமானப் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைப் பயனர்கள் அனுபவித்து மகிழ முடியும்.

ஆஸ்ட்ரோ வானொலியின் தலைமை நிர்வாக அதிகாரி, கென்னி ஓங் கூறுகையில், “மலேசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க ஆடியோப் பொழுதுபோக்கு மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் நெட்வொர்க்காக வளர, எங்களின் உருமாற்றப் பயணத்தைத் தொடங்கும் வேளையில் மிகவும் பொருத்தமான, ஆடியோ ஸ்ட்ரீமிங் தேர்வுகளை எங்களின் நேயர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ற உள்ளடக்கத்துடன் அறிமுகப்படுத்துவதில் ஆஸ்ட்ரோ வானொலி உற்சாகமாக உள்ளது. விரைவான வேகத்தில் மின்னியல் தளத்தில் ஏற்படும் இடையூறுகள், ஆஸ்ட்ரோ வானொலிப் பிராண்டுகளைத் தொடர்புடையதாக வைத்திருக்கும் இயங்கலை இசை ஸ்ட்ரீம்களை வழங்கும் எங்களின் பரிணாமத்தைத் தொடர்ந்துத் தூண்டுகிறது. அதிக வாழ்க்கை முறைகள் மற்றும் விருப்பங்களுக்குப் பொருந்தும் வண்ணம் எங்களின் 60 புதிய இயங்கலை வானொலி நிலையங்களுடன் அதிகத் தனிப்பயனாக்கத்தைப் புதிய SYOK செயலி வழங்குகிறது.
இந்தப் புதியப் பொழுதுபோக்கு அனுபவத்தை மலேசியர்கள் SYOK செயலி மற்றும் அகப்பக்கம் வாயிலாக அனுபவித்து மகிழ்வார்கள் என நம்புகிறோம்” என்றார்.

ஓங் தொடர்ந்துக் கூறுகையில், “அணுகலை விரிவுப் படுத்துவதற்கும், பல்வேறுத் தளங்களில் உள்ளடக்கம் மற்றும் இசையின் பரந்தத் தேர்வை விளம்பரப்படுத்துவதற்கும் மூன்று புதிய வார இறுதி நிகழ்ச்சிகளை வானொலி மற்றும் SYOK செயலியில் அறிமுகப்படுத்த ஆஸ்ட்ரோ வானொலி, சமீபத்தில், டிக்டாக்குடன் இணைந்துச் செயல்பட்டது. மேலும், வாகனங்கள் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புகளில் SYOK செயலியை ஒருங்கிணைக்க, தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி விவேக மொபிலிட்டி வழங்குநரான ACO Tech உடன் நாங்கள் கூட்டாண்மையில் ஈடுப்பட்டோம். அதுமட்டும்மின்றி, பயனர்களுக்கு உயர்ந்த விவேகக் கடிகார அனுபவத்தை வழங்க SYOK செயலியை HUAWEI WATCH 3 தொடரில் ஒருங்கிணைக்க HUAWEI உடன் நாங்கள் கூட்டாண்மையில் ஈடுப்பட்டோம். மலேசிய வானொலி மற்றும் ஆடியோ துறையை நாங்கள் தொடர்ந்துப் புதுமைப்படுத்தி, உருமாற்றி வருவதால், மேலும் அதிகக் கூட்டாண்மைகளை அறிவிப்போம்.”
Confession Bilik Gelap, TechniPod, Moon’s Parenting Tips, Pei Diary okaywith Lingkesvaran உள்ளிட்ட SYOK-இல் பிரத்தியேகமாகக் கிடைக்கப் பெறும் பல்வேறு மொழிகளிலான ட்ரெண்டிங் ஒலிப்பெட்டகங்களை மலேசியர்கள் தொடர்ந்து ஸ்ட்ரீம் செய்யலாம். அதுமட்டுமின்றி அனைத்து நேரலை வானொலி உள்ளடக்கத்தையும் (வானொலி ஆன் டிமாண்ட்) எப்போது வேண்டுமானாலும் மலேசியர்கள் கேட்டு மகிழலாம். Everyday Malaysians, SYOK Busybody, மற்றும் SYOK Food Taster போன்றப் பொருத்தமான மற்றும் சுவாரசியமானக் கதைகளைக் கொண்டக் குறுகிய வடிவக் காணொளிகள், SYOK அசல் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை SYOK செயலி மலேசியர்களுக்கு வழங்கும். ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெற, நவம்பர் 8 முதல் செயலி மற்றும் வானொலி வாயிலாக நடைபெறும் ‘SYOK 101’ போட்டி உட்பட உற்சாகமானப் பரிசுகளை வீட்டிற்கு வென்றுச் செல்லும் வாய்ப்பிற்காகப் போட்டிகளில் மலேசியர்கள் பங்கேற்பதோடுத் தற்போதையக் கட்டுரைகளைப் படித்து அனுபவிக்கலாம்; செய்திகள் மற்றும் போக்குவரத்து அறிவிப்புகளையும் அறிந்துக் கொள்ளலாம்.

Google Play, Apple App Store அல்லது Huawei App Gallery வழியாக SYOK செயலியைப் பதிவிறக்கம் செய்யவும் அல்லது SYOK இயங்கலையை வலம் வரவும்.