Home Photo News பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதிக்கு சரவணன் வருகை

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதிக்கு சரவணன் வருகை

604
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று மனித வள அமைச்சராக இருக்கும் டத்தோஶ்ரீ எம்.சரவணனின் மனதுக்கு நெருக்கமானத் திட்டங்களில் ஒன்று – அவர் கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சராக இருந்தபோது பிரிக்பீல்ட்சில் அவரின் முயற்சியால் தொடங்கப்பட்ட “லிட்டல் இந்தியா” திட்டம்.

இன்று அந்தத் திட்டத்தால் இந்திய வணிகர்கள் பலர் பயன் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன் அவர்களின் வணிக வருமானமும் காலப்போக்கில் அதிகரித்தது.

பொதுமக்களும் குறிப்பாக இந்திய சமூகத்தினர் இந்தத் திட்டத்தால் பெரும்பயன் அடைந்தனர். அவர்களின் பெரும்பாலான தேவைகளுக்கு அவர்கள் லிட்டல் இந்தியா வளாகத்தைத்தான் நாடுகின்றனர். இங்குள்ள பெரும்பாலான வணிகங்களை இந்தியர்களே முன்னின்று நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

மேலும், லிட்டல் இந்தியா, மலேசிய சுற்றுலா கையேடுகளிலும் சுற்றுலா வரைபடங்களிலும் இடம் பெற்றதைத் தொடர்ந்து இங்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளின் வருகையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய பாரம்பரிய சின்னங்கள், கட்டமைப்புகள், வணிகங்கள் என இந்தியர்களின் பாரம்பரியத்தை அனைவருக்கும் உணர்த்தும் மையமாக லிட்டல் இந்தியா உருவெடுத்துள்ளது.

கொவிட்-19 பாதிப்புகள் காரணமாக, இங்குள்ள வணிகங்கள் பாதிக்கப்பட்டாலும், தற்போது அரசாங்கத்தின் மீட்சி நடவடிக்கைகளைத் தொடர்ந்து அண்மையக் காலத்தில் இங்கு வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதன் காரணமாக வணிகப் பரிமாற்றங்களும் அதிகரித்திருக்கின்றன.

லிட்டல் இந்தியா உருவான ஆண்டுவிழாவைக் கொண்டாட கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி இந்தப் பகுதிக்கு சரவணன் சிறப்பு வருகையொன்றை மேற்கொண்டார்.

அவருடன் ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா சாதிக்கும் வருகை புரிந்தார்.

லிட்டல் இந்தியாவிலுள்ள பல கடைகளுக்கு வருகை தந்து அந்த வணிகர்களின் நிலைமையை சரவணன் கண்டறிந்தார். அந்த நேரத்தில் அங்கு வருகை தந்த பொதுமக்களுடனும் அளவளாவி மகிழ்ந்தார்.

சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேச இந்திய வர்த்தக சபை சார்பில் நடத்தப்பட்ட வசதி குறைந்தவர்களுக்கான அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் சரவணன் கலந்து கொண்டார். அவருடன் எச்ஆர்டிஎப் என்னும் மனித வள மேம்பாட்டு நிதியின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ சாகுல் ஹமீதும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சிகளின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal