Home கலை உலகம் ‘ஜெய் பீம்’ : சூர்யாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் அணி திரளும் தமிழகம்!

‘ஜெய் பீம்’ : சூர்யாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் அணி திரளும் தமிழகம்!

896
0
SHARE
Ad

சென்னை : சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படம் தொடர்பான சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கது வருகின்றன. பாமகவினர்-வன்னியர் சமூக அமைப்பினர் சூர்யாவுக்கு எதிராக அணி திரண்டிருக்கின்றனர். அதே சமயம் பல அரசியல் அமைப்புகளும், பொது அமைப்புகளும் தொடர்ந்து சூர்யாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

பல சினிமா நட்சத்திரங்கள் நமக்கேன் வம்பு என இந்த சர்ச்சையிலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.

சூர்யா நடிப்பில் ஓடிடி எனப்படும் கட்டண வலைத் திரையில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். சூர்யாவின் 39-வது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

#TamilSchoolmychoice

சக நடிகருக்கு பிரச்னை ஏற்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் மெளனம் காத்து வருகின்றனர்.

சூர்யாவும், அன்புமணிக்கு எழுதிய பதில் கடிதத்தில், ‘பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்’ என, அன்புமணியிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த இருவரின் அறிக்கை மோதலைத் தொடர்ந்து “இருவரும் சமரச பேச்சு நடத்த முன் வரவேண்டும்’ என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.