Home இந்தியா கர்நாடகாவில் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம்

கர்நாடகாவில் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம்

675
0
SHARE
Ad

MODIபெங்களூர், ஏப். 23-  கர்நாடகா சட்டசபைக்கு மே மாதம் 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

காங்கிரஸ், பாரதீய ஜனதா தலைவர்கள் முற்றுகை யிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று கர்நாடகா வருகிறார்.

ராய்ச்சூர், பிஜப்பூர் மாவட்டங்களில் நடை பெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி பேசுகிறார். அதைத்தொடர்ந்து வருகிற 26-ந்தேதி கோலார், தும்கூர் மற்றும் காவேரியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களிலும் மே 1-ந்தேதி மண்டியா, ஹாசன், சிமோகா மாவட்டங்களிலும் ஆதரவு திரட்டுகிறார்.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி 26-ந்தேதி சிக் மகளூர் மற்றும் மங்களூரில் நடைபெறும் கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். 30-ந்தேதி குல்பர்கா மற்றும் பெல்காம் மாவட்டங்களிலும், மே மாதம் 2-ந்தேதி மைசூர், பெங்களூரிலும் சோனியா காந்தி பிரசாரம் செய்கிறார்.
பிரதமர் மன்மோகன்சிங் வருகிற 29-ந்தேதி ஊப்ளிதார்வார் மற்றும் பெங்களூரில் நடைபெறும் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். பாரதீய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக மேலிட தலைவர்கள் அத்வானி, ராஜ்தாத்சிங், சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முதல் கட்ட பிரசாரத்தை முடித்து உள்ளனர்.
குஜராத் முதல்மந்திரி நரேந்திரமோடி வருகிற 28-ந்தேதி பெங்களூர் நேஷனல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
அதேபோல் வருண் காந்தி வருகிற 26 மற்றும் 27 ஆகிய 2 நாட்கள் ஊப்ளி மற்றும் மங்களூரில் பிரசாரம் செய்வார் என்றும், முன்னாள் முதல்மந்தரி உமா பாரதி பெங்களூர் மண்டலத்தில் 2 நாட்கள் ஆதரவு திரட்டுவார் என்றும் கூறப்படுகிறது. அத்வானி மீண்டும் 24 மற்றும் 25 ஆகிய 2 நாட்கள் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.