Home அரசியல் “தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒரு இந்தியரின் முத்தம் சுல்கிப்ளியை காப்பாற்றிவிடாது” – அன்வார்

“தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒரு இந்தியரின் முத்தம் சுல்கிப்ளியை காப்பாற்றிவிடாது” – அன்வார்

593
0
SHARE
Ad

zulkifli_noordin_kissபெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 23 – தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒரு இந்தியரின் முத்தத்தை வைத்து, சுல்கிப்ளியை ஷா ஆலம் தொகுதியில் வாழும் இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று நஜிப் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

சுல்கிப்ளியின் பேச்சு இந்திய மக்களால் என்றும் ஜீரணிக்க இயலாதது என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் கூறியுள்ளார்.

மேலும் “சுல்கிப்ளி போன்ற ஒரு இன வெறிபிடித்த, அடுத்தவரின் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் ஒரு அரசியல்வாதி இருக்கவே முடியாது. அப்படி ஒரு மனிதரை நஜிப் துன் ரசாக் தேர்ந்தெடுத்ததின் இரகசியம் என்ன?” என்று அன்வார் இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த வாரம் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுல்கிப்ளியை, தேசிய முன்னணியின் ஆதரவாளரான ஒரு இந்தியர் கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

இது பற்றி நேற்று இரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய நஜிப்,

“இந்தியர்கள் அனைவரும் சுல்கிப்ளியை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு இந்த முத்தம் தான் சாட்சி. மேலும் சுல்கிப்ளி தனது பேச்சு குறித்து அனைத்து இந்திய மக்களிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டார். அதோடு ஷா ஆலம் தொகுதியில் இந்திய மக்களுக்காக பள்ளிகளும், கோயில்களும் நிறுவும் பணிகளை செய்வேன் என்று கூறியுள்ளார். எனவே இந்திய மக்கள் அனைவரும் சுல்கிப்ளியின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று நஜிப் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.