Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : “கதாநாயகி” தொடர் நடிகர்கள்- குழுவினருடன் ஒரு சிறப்பு நேர்காணல்

ஆஸ்ட்ரோ : “கதாநாயகி” தொடர் நடிகர்கள்- குழுவினருடன் ஒரு சிறப்பு நேர்காணல்

650
0
SHARE
Ad

 

  • ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறிய கதாநாயகி’ தொடரில் பங்கேற்ற, நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு சிறப்பு நேர்காணல். இந்தத் தொடரை ஆஸ்ட்ரோ ஒன் டிமாண்டில் தொலைக்காட்சி இரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

விக்கி ராவ், ‘சீனப்பையன்’ பிளேக் யாப் & ஷாமினி ஷ்ரதா, நடிகர்கள்:

#TamilSchoolmychoice

1. கதாநாயகி தொடரில் நீங்கள் நடித்தக் கதாப்பாத்திரத்தைப் பற்றிக் கூறுங்கள்?

விக்கி: ‘சரண்’ எனும் அடக்கமான, மென்மையானச், சுயாதீனக் கதாப்பாத்திரத்தில் நடித்தேன். ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சொந்தக் காலில் நிற்க விரும்பும் ஒரு நபர். சரணின் கதாப்பாத்திரத்தை என்னால் தொடர்புப்படுத்த முடியும். இந்தக் கதாப்பாத்திரத்தில் வெற்றிகரமாக நடிக்க ரவின் மனோகரன் மற்றும் மார்ட்டின் ராஜ் உள்ளிட்ட இயக்குநர்கள் எனக்கு உத்வேகமாக அமைந்தனர்.

பிளேக்: நான் நடித்த ‘வில்லி’ கதாப்பாத்திரம் எனக்கு நேர்மாறானக் கதாப்பாத்திரம். பொறுமைக் குணம் கொண்ட வில்லி தன்னைச் சுற்றியுள்ளவர்களிடையே மோதல்களையும் வாக்குவாதங்களையும் எப்போதும் தவிர்க்க முயற்சி செய்வார். எனக்குச் சரளமாகத் தமிழ் பேசத் தெரியாது, அதனால் வில்லியின் கதாப்பாத்திரத்தை யதார்த்தமாகச் சித்தரிக்க முடிந்தது.

ஷாமினி: உறுப்புத் திருட்டு இயக்கத் தலைவரால் கொடூரமாகக் கொலைச் செய்யப்பட்ட நபருடைய ‘ஆவி’ வேடத்தில் நடித்தேன். இந்தக் கதாப்பாத்திரம் மிகவும் விரிவாகவும் துல்லியமாகவும் கடினமாகவும் இருந்ததால் இக்கதாப்பாத்திரத்தில் நடித்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

எனது தொழில் பயணத்தில் முதல் முறையாக இவ்வளவுச் சக்தி வாய்ந்த மற்றும் குறிப்பிடத்தக்கக் கதாப்பாத்திரத்தில் நடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பல சிரிக்க வைக்கும் தருணங்களைக் கொண்டிருப்பதால், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இணைந்துப் பார்க்க வேண்டியத் தொடர் என்றுதான் நான் கூறுவேன். சாமானியர் சொற்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதால் நான் தனிப்பட்ட முறையில் உரையாடல்களை இரசித்தேன்.

2. கதாநாயகி தொடரில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

பிளேக் யாப்

விக்கி: நடிகர்கள் மத்தியில் எங்களுக்குள் வேதியியல் உருவாக்க நாங்கள் ஒருவருக்கொருவர் உதவினோம். முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்தது இதுவே எனது முதல் முறையாகும். எனவே, அதனைச் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற அழுத்தம் எனக்குள் இருந்தது. இயக்குநர் கபிலன் பூலோன்திரனின் ஊக்கமும் வழிக்காட்டுதலும் இதனைச் சிறப்பாக நடிக்க முடிந்தது.

பிளேக்: தமிழ் சரளமாகப் பேச முடியாததால் அனுபவம் மிகவும் சவாலாக இருந்தது. இருப்பினும், இரசிகர்களை எதிரொலிக்கும் யதார்த்தமான நடிப்பை வழங்க என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். துணை இயக்குநர், ஹெஷ்விந்த் எப்போதும் என்னுடன் உரையாடல்களைக் கலந்துரையாடுவார். அதுமட்டுமின்றி, இயக்குநர் கபிலன் பூலோன்திரன் எனது நடிப்பை மேலும் மேன்மைப் படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கினார். தமிழில் பெரும்பாலான உரையாடல்களை ஒரு நிமிடத்திற்கு மேல் பேசி நான் நடித்தது எனக்கு ஒரு மறக்க முடியாத தருணமாக இருந்தது. ஏறக்குறைய 6 மணி நேரம் மனப்பாடம் செய்து, ஒத்திகை பார்த்தப் பிறகு, வெறும் மூன்று டேக்குகளில் நடிப்பை வழங்க முடிந்தது. பார்வையாளர்கள் அந்தக் காட்சியை இரசித்தார்கள் என்று நம்புகிறேன்.

ஷாமினி: நான் நடிக்க விரும்பியக் கதாப்பாத்திரங்களில் இதுவும் ஒன்று. எனதுக் கலைப் பயணத்தில் முதன் முறையாக இக்கதாப்பாத்திரத்துக்கு மனம் மற்றும் உடல் வலிமைத் தேவைப்பட்டது. தோற்றம் யதார்த்தமாக இருப்பதை உறுதிச்செய்ய, எஃப்.எக்ஸ் எனப்படும் பிரத்தியேக ஒப்பனையை ஒப்பனைக் கலைஞர் பயன்படுத்தினார். இவ்வொப்பனை சிற்பம், வடிவமைத்தல் மற்றும் பலவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு நபரின் தோற்றத்தை மாற்றிவிடும்.

என் தோலில் கடுமையானத் தடிப்புகள் ஏற்பட்டதால் மருத்துவக் கவனிப்பும் சிகிச்சையும் தேவைப்பட்டது. மேலும் பேய் தோற்றத்தை மிகவும் யதார்த்தமாகச் சித்தரிக்க நான் 22 விட்டம் கொண்ட காண்டாக்ட் லென்ஸை அணிய வேண்டியிருந்தது. வித்தியாசமானத் தோற்றத்தைப் பெற, ஒரு நாளைக்கு இரண்டு முறை இதே போன்றக் காட்சிகளை மீண்டும் நடிக்க வேண்டியத் தேவைகள் ஏற்பட்டன.

இருப்பினும், எனது நடிப்பின் முடிவைப் பார்த்தப்போது, நான் சந்தித்த சவால்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. எனது கடின உழைப்புகள் அனைத்தும் பலனளித்தது என்றுதான் கூறுவேன். ‘பேய்’ வேடத்தில் நடித்தவர்கள் அமானுஷ்யச் சக்தியின் தொந்தரவிற்கு ஆளாகியுள்ளனர் என்ற கதைகளை நான் படித்திருக்கிறேன். ஆனால், அது எனக்கே நேர்ந்தது. நான் எனது சக நடிகரின் கழுத்தை நெரிக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது. காட்சி முடிந்தைக்கூட அறியாமல் எனது சக நடிகரின் கழுத்தை நான் தொடர்ந்து நெரித்ததால் கிட்டத்தட்ட காயம் ஏற்படவே ஒட்டுமொத்த அணியும் அதிர்ந்து போனது.

காட்சி முடிந்துவிட்டதாக யாரும் கூறியதை நான் கேட்கவில்லை. மேலும் என்ன நடந்தது என்பதை என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை. எனது குழுவின் ஆதரவுடன் நான் சுயநினைவுக்கு வர சிறிது நேரம் ஆனது. இதுபோன்றச் சம்பவத்தை நான் அனுபவிப்பது இதுவே முதல் முறை. அந்த இடத்தில் எதிர்பாராதச் சம்பவங்கள் நடந்ததால் படப்பிடிப்பை ரத்து செய்து, மறுதிட்டமிட வேண்டியத் தேவை ஏற்பட்ட நாட்களும் இருந்தன.