Home சமயம் தெலுக் இந்தான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் சித்திரா பெளர்ணமி விழா

தெலுக் இந்தான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் சித்திரா பெளர்ணமி விழா

727
0
SHARE
Ad

murugaதெலுக் இந்தான், ஏப்ரல் 23-  சித்திரா பெளர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்தன்று சைவ மக்களால் அநுட்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும்.

எதிர்வரும்  25.4.2013 ஆம் தேதி வியாழக்கிழமை ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் சித்திரா பெளர்ணமி கோலாகலத்துடன் கொண்டாடப்படவுள்ளது.

மலேசியாவின் சின்னப் பழனி என்று போற்றப்படும்  இக்கோவிலில் நாடு தழுவிய நிலையிலும் சிங்கப்பூர், இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

சித்திரா பெளர்ணமியன்று அதிகாலை 4.30 மணி முதல் பாலாபிஷேகம் நடைபெறும்.

நித்திய பூசையைத் தொடர்ந்து காவடி நேர்த்தி கடனும் காலை 10 மணிக்கு அபிஷேகமும் நடைபெறும்.

அதனை தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூசை, மகேஸ்வர பூசையைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.