Home இந்தியா ஓபிஎஸ் – சசிகலா ஆதரவாளர்களைச் சந்தித்தார்

ஓபிஎஸ் – சசிகலா ஆதரவாளர்களைச் சந்தித்தார்

746
0
SHARE
Ad

சென்னை : எதிர்வரும் வியாழக்கிழமை ஜூன் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்‌ குழுக்‌ கூட்டத்தை முன்னிட்டு அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பும் கூடிவருகிறது.

இந்தக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அதே வேளையில் இன்று திங்கட்கிழமை சசிகலாவின் ஆதரவாளர்களையும் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற முழக்கத்தோடு எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட காய்களை நகர்த்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பொதுக் குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்வாரா அல்லது கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என இருவரையும் அவரது இல்லங்களில் பல்வேறு தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருவருக்கும் இடையிலான மோதலைத் தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.