Home நாடு துன் சாமிவேலு இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 16) நடைபெறும்

துன் சாமிவேலு இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 16) நடைபெறும்

678
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலு இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 15) காலை காலமானார். அவரின் நல்லுடல் கீழ்க்காணும் முகவரியில் உள்ள அவரின் இல்லத்தில் இன்று பிற்பகல் 2.00 மணி தொடங்கி பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும்:

No. 19, Lengkongan Vethavanam,
Batu 3 1/2,
Jalan Ipoh,
51100 Kuala Lumpur.

நாளை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 16) பிற்பகல் 3.00 மணியளவில் துன் சாமிவேலுவின் நல்லுடல் அவரின் இல்லத்திலிருந்து  செராஸ், ஜாலான் குவாரியிலுள்ள டேவான் பண்டாராயா மின்சுடலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மாலை 4.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இந்த விவரங்களை சாமிவேலுவின் முன்னாள் பத்திரிகை செயலாளர் டத்தோ இ.சிவபாலன் தெரிவித்துள்ளார்.