Home உலகம் சிங்கப்பூரில் மீ செடாப் உணவுப் பொருட்களுக்குத் தடை

சிங்கப்பூரில் மீ செடாப் உணவுப் பொருட்களுக்குத் தடை

644
0
SHARE
Ad

சிங்கப்பூர் : எத்திலீன் ஆக்சைடு என்ற இராசயனப் பொருளின் உள்ளடக்கம் இருப்பதால், இந்தோனேசியாவில் இருந்து தயாரிக்கப்படும் மீ செடாப் (Mie Sedaap) என்ற துரித உணவுப் பொருட்களை திரும்பப் பெறவேண்டும் என சிங்கப்பூர் உணவு ஆணையம் (SFA -Singapore Food Authority) உத்தரவிட்டுள்ளது.

மீ செடாப் சோத்தோ பிளேவர் (Mie Sedaap Soto) உடனடி நூடுல்ஸ் மற்றும் கறி ஃப்ளேவர் உடனடி நூடுல்ஸ் ஆகியவற்றை திரும்பப் பெற ஆர்க்லைஃப் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக சிங்கப்பூர் உணவு ஆணையம் கூறியது.

முன்னதாக, அக்டோபர் 6 ஆம் தேதி ஷெங் ஷெங் எஃப்&பி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் மை சேடாப் கொரியன் ஸ்பைசி சூப் உடனடி நூடுல்ஸ் மற்றும் கொரிய ஸ்பைசி சிக்கன் இன்ஸ்டன்ட் நூடுல்ஸை திரும்பப் பெறுமாறு சிங்கப்பூர் உணவு ஆணையம் அறிவுறுத்தியது.

#TamilSchoolmychoice

மற்ற மீ செடாப் உடனடி நூடுல் தயாரிப்புகளின் ஒழுங்குமுறை சோதனையைத் தொடர்வதாகவும் சிங்கப்பூர் உணவு ஆணையம் குறிப்பிட்டது.

“எத்திலீன் ஆக்சைடு மாசுபாட்டிற்கான காரணத்தை ஆராய்ந்து சரிசெய்ய இறக்குமதியாளர்கள் மற்றும் இந்தோனேசிய அதிகாரிகளுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். எத்திலீன் ஆக்சைடு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச அளவைத் தாண்டி கண்டறியப்பட்டால், சிங்கப்பூர் உணவு ஆணையம் பாதிக்கப்பட்ட தயாரிப்புகளை திரும்பப் பெறத் தொடங்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.