Home நாடு ஜசெகவிலிருந்து ரோனி லியூ விலகினார்

ஜசெகவிலிருந்து ரோனி லியூ விலகினார்

799
0
SHARE
Ad
ரோனி லியூ

கோலாலம்பூர் : ஜனநாயக செயல் கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர்களில் ஒருவரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியிருப்பவருமான ரோனி லியூ ஜசெகவிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இந்தத் தகவலை அவரும் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஒரு காலத்தில் லிம் கிட் சியாங்கின் பாசத்துக்குரியவர்களில் திகழ்ந்தவர் ரோனி லியூ. அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளையும் துணிச்சலுடன் வெளியிடுவார்.

ஜசெக தலைமைத்துவத்திற்கு எதிராகவும் அவர் பல முறை குரல் கொடுத்திருக்கிறார். அண்மையக் காலமாக அவருக்கும் ஜசெக தலைமைத்துவத்திற்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் அதிகரித்ததாகக் கருதப்படுகிறது. அதன் காரணமாக அவர் ஜசெகவிலிருந்து விலகுவதாகவும் நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice