Home நாடு மாமன்னரைச் சந்தித்தார் பிரதமர் – எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்

மாமன்னரைச் சந்தித்தார் பிரதமர் – எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்

547
0
SHARE
Ad

கோலாலம்பூர் :  ஊடகங்களுக்குக் கூட தெரியாத நிலையில் – இன்று ஞாயிற்றுக்கிழமை மாமன்னரை பிரதமர் இஸ்மாயில் சாப்ரி சந்தித்திருப்பது, நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான ஆரூடங்களை தீவிரப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அக்டோபர் 11-ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற ஆரூடம் வலுத்து வருகிறது.

மாமன்னர் தம்பதியர் நாளை திங்கட்கிழமை (அக்டோபர் 10) இலண்டனுக்கு சிறப்புப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றனர். பிரிட்டனின் புதிய மன்னராகியிருக்கும் 3-ஆம் சார்ல்ஸ் மன்னரை மாமன்னர் தம்பதியர் அக்டோபர் 12-ஆம் தேதி சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில். நாடாளுமன்றக் கலைப்புக்கு மாமன்னர் ஒப்புதல் அளித்திருக்கிறார் என்ற தகவல்களும் கசிந்துள்ளன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று பிரதமர்-மாமன்னர் இடையிலான சந்திப்பு அமைந்திருக்கிறது.