Home கலை உலகம் ஆஸ்ட்ரோ தீபாவளி கொண்டாட்டம் – மகிழ்ச்சியைத் தூண்டும் நிகழ்ச்சிகள்

ஆஸ்ட்ரோ தீபாவளி கொண்டாட்டம் – மகிழ்ச்சியைத் தூண்டும் நிகழ்ச்சிகள்

685
0
SHARE
Ad

இத்தீபாவளிக்கு உள்ளூர் மற்றும் பன்னாட்டு முதல் ஒளிபரப்புகளுடன் ஆஸ்ட்ரோ பண்டிகை மகிழ்ச்சியைத் தூண்டுகிறது.

கோலாலம்பூர் : டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் உற்சாகமூட்டும் விரிவான உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிகழ்ச்சிகளின் முதல் ஒளிபரப்புகளுடனும் மூன்று புதிய அலைவரிசைகளுடனும் தீபாவளி பண்டிகையைப் மிக விமரிசையாக ஆஸ்ட்ரோ வரவேற்கிறது. பண்டிகைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து மலேசியர்களும் மின்னியல் தளமான ஆஸ்ட்ரோ உலகம், ராகா வானொலி மற்றும் இ-காமர்ஸ் தளமானக் கோ ஷாப் ஆகியவற்றில் தீபாவளி சிறப்புகளை எதிர்ப்பார்க்கலாம்.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் பின்வருமாறு கூறுகிறார்:  “உள்ளூர் உள்ளடக்கம் மற்றும் திறமைகளை ஆக்கப்பூர்வமாக வெற்றிபெறச் செய்து அதில் முன்னிலை வகிப்பதற்கான எங்களின் பயணத்தைத் தொடரும் வேளையில், இப்பண்டிகைக் காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பலதரப்பட்ட உயர்தர உள்ளூர் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், மலேசியர்களுக்கானப் பொழுதுபோக்குத் தளமாக எங்களின் நோக்கத்தை வலுப்படுத்துவதால், உள்ளூர் தயாரிப்புகளின் பட்டையைத் தொடர்ந்து உயர்த்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பண்டிகைகளை நாம் ஒன்றாகக் கொண்டாடும் தருணத்தில், நம் இதயங்களுக்கு நெருக்கமானவர்களுடன் நம் பிணைப்பைத் தழுவிக்கொள்ள இவ்வாண்டுக்கானக் கருப்பொருள் #இணைவோம்இணைப்போம் நம்மைத் தூண்டுகிறது.

#TamilSchoolmychoice

வாடிக்கையாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இரசிக்க, டெலிமூவிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், பல்வேறு நிகழ்ச்சிகள் நகைச்சுவை நிகழ்ச்சிகள், வலைத் தொடர்கள், குறும்படங்கள் மற்றும் கச்சேரிகள் எனப் பல நிகழ்ச்சிகளை எதிர்ப்பார்க்கலாம். கூடுதலாக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் மூன்று சிறந்த தமிழ் அலைவரிசைகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்:

சன் நியூஸ் (அலைவரிசை 215),
கேடிவி (அலைவரிசை 216) மற்றும்
சன் லைவ் (அலைவரிசை 217)
-ஆகியவை டிவி மற்றும் ஆஸ்ட்ரோ கோ ஆகியவற்றில் மிகவும் பிரபலமான இந்திய நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றியையும் பண்டிகையைக் கொண்டாடுபவர்களுக்கு, தீபாவளி நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”

ஹிட் திரைப்படங்கள், திரைப்படங்களின் நகைச்சுவைத் துணுக்குகள், செய்திகள், விளையாட்டு, அரசியல் அறிவிப்புகள், இசை நிகழ்ச்சிகள் போன்ற பல நிகழ்ச்சிகளை வழங்கும் சன் நியூஸ் (அலைவரிசை 215), கேடிவி (அலைவரிசை 216) மற்றும் சன் லைவ் (அலைவரிசை 217) ஆகிய மூன்று புதியத் தமிழ் அலைவரிகளை அக்டோபர் 13, 2022 முதல் டிவி மற்றும் ஆஸ்ட்ரோ கோ ஆகியவற்றில் இந்தியன் ஃபேவரிட்ஸ் மற்றும் மஹாராஜா தொகுப்பில் உள்ள ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம். அக்டோபர் 13, 2022 முதல் கிடைக்கப் பெறாதச் சுட்டி டிவிக்கு (அலைவரிசை 213) பதிலாக இந்தப் புதிய அலைவரிசைகள் இடம்பெறும்.

முதல் ஒளிபரப்புக் காணும் இத்தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டுக் களிக்கலாம்:

சமையல் நிகழ்ச்சிகள், ஓ மை பேக்கரி மற்றும் தல தீபாவளி விருந்து; பல்வேறு இசை நிகழ்ச்சி, அழகு குட்டி செல்லம்; நாடக டெலிமூவியான நரை வந்த பிறகு மற்றும் இசை நகைச்சுவை டெலிமூவியானக் குட்டிப் பட்டாஸ்; விளையாட்டு நிகழ்ச்சிகளான, குட்டிப் பட்டாஸ் ரகளை மற்றும் சிங்க பெண்ணின் தீபாவளி கலாட்டா; மற்றும் ‘உலகம் குறும்படப் போட்டி’யின் சிறந்தக் குறும்படங்களான யேக்கம், பாட்டி மூச்சு நின்னு போச்சே, வந்தனா மற்றும் பல. அமர்க்கள தீபாவளி 2022 என்ற சிங்கப்பூர் நேரலை நிகழ்ச்சியையும் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

விளையாட்டு நிகழ்ச்சிகள், பட்டாஸ்’உ படேப், பரமபதம் மற்றும் பட்டாஸ் ஜோடி கேம் ஷோ; நாடக டெலிமூவி, பட்டாஸ் ஜோடி; காமெடி ஸ்கெட்ச், காமெடி டிவி; மற்றும் பல்வேறு நிகழ்ச்சி, உங்கள் விருப்பம் உள்ளிட்ட மேலும் பல உள்ளூர் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) -இல் முதல் ஒளிபரப்புக் காணும்.

வாடிக்கையாளர்கள் இந்தியாவில் இருந்து விருப்பத்தகத் தீபாவளி நிகழ்ச்சிகளை எதிர்ப்பார்க்கலாம்:

• ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 223)-இல் பொழுதுபோக்கு நிகழ்ச்சி, ஜீ தமிழ் சாம்ராஜ்ஜியம்; காமெடிக் கற்பனைத் திரைப்படமான மை டியர் பூதம்; மற்றும் திகில் திரைப்படமானக் காட்டேரி.

• கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 222)-இல் நாடகத் திரைப்படமானக் கூகுள் குட்டப்பா; மற்றும் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான ஐங்கரன்.

• ஸ்டார் விஜய் எச்டி (அலைவரிசை 221)-இல் ரியாலிட்டி நிகழ்ச்சிப் பிக் பாஸ் சீசன் 6 (தமிழ்).

• கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116)-இல் வாழ்க்கை வரலாற்று நாடகம் ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட். (Rocketry: The Nambi Effect)

• BollyOne HD (அலைவரிசை 251)-இல் நகைச்சுவை நாடகத் திரைப்படமானப், பபாட் ஜி (Fuffad Ji).

அக்டோபர் 23 முதல் 25 வரை டிவியில், ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) மற்றும் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) மூலம் புலனம் (WhatsApp) வாயிலாக 0133445453 என்ற எண்ணில் அல்லது டிவி திரைகளில் QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தங்கள் தீபாவளி வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளலாம். டிவி, ராகா வானொலி மற்றும் ஆஸ்ட்ரோ உலகத்தின் சமூக வலைத்தளங்களில் கிடைக்கப் பெறும் இணைவோம் இணைப்போம் எனும் மனதைக் கவரும் தீபாவளிப் பாடலை வாடிக்கையாளர்கள் இரசிக்கலாம்.

அனைத்து மலேசியர்களும் மின்னியல் தளமான ஆஸ்ட்ரோ உலகத்தில் கண்ணா முறுக்கு தின்ன ஆசையா என்ற திகில் நகைச்சுவைத் தொடரை ஆவலுடன் எதிர்ப்பார்க்கலாம் மற்றும் தீபாவளி சிறப்பு AR பில்டர்களை அனுபவிக்கலாம். நவம்பர் 24, 2022 முதல் நாடு முழுவதும் உள்ளத் திரையரங்குகளில் கஜன் எனும் ஆக்‌ஷன், நாடகம், காதல் திரைப்படத்தின் முதல் ஒளிப்பரப்பைத் திரைப்பட ஆர்வலர்கள் எதிர்ப்பார்க்கலாம்.

ராகாவிலும் தீபாவளிக் கொண்டாட்டம்

வானொலி முன்னணியில், அக்டோபர் 11, இரவு 8 மணிக்கு அஹிலா மற்றும் சுரேஷ் பங்கேற்கும், பிரபலமான உள்ளூர் திறமையாளரான ஷேன் எக்ஸ்ட்ரீமின் சிறப்பு நிகழ்ச்சி இடம்பெறும் ராகா டிக்டாக் நேரலைத் தீபாவளி கொண்டாட்டத்தை பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்ய மலேசியர்கள் ஆவலுடன் காத்திருக்கலாம், பிரத்யேகப் பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளையும் பெறலாம்.

raaga.syok.my-இல் ராகா-வின் தீபாவளி பரிசு வழியாக நேயர்கள் தங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதன் மூலம், தங்களின் அன்புக்குரியவர்களைச் பாரம்பரிய மற்றும் தனிப்பட்டத் தீபாவளி அட்டைகள் மூலம் மகிழ்ச்சிப்படுத்தலாம். வேடிக்கையானத் தீபாவளி GIFகளையும் அறிவிப்பாளர்கள் இடம்பெரும் ராகா-வுடன் தீபாவளி எனும் ஒரு வாழ்த்துக் காணொளியையும் சமூக ஊடகத் தளங்களில் நேயர்கள் எதிர்ப்பார்க்கலாம்.

தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, தீபாவளி சிறப்பு நேரலை நிகழ்ச்சியை ஒவ்வொரு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளிலும் மதியம் 1 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் அக்டோபர் 18 வரை கோ ஷாப் ஒளிபரப்புகிறது. சமையல் பாத்திரங்கள், சமையலறை உபகரணங்கள், உணவு மற்றும் பல தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் சிறப்பு சலுகைகளைப் பெறலாம் மற்றும் பொருட்களையும் வாங்கலாம். மேல் விபரங்களுக்கு goshop.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வரவும் அல்லது Google Play அல்லது App Store-இல் செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.

மேல் விபரங்களுக்கு:

www.AstroUlagam.com.my/InaivomInaippom எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.