Home நாடு பேராக்கில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால் சாரனி முகமட் மீண்டும் மந்திரி பெசார்

பேராக்கில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால் சாரனி முகமட் மீண்டும் மந்திரி பெசார்

468
0
SHARE
Ad

ஈப்போ : பேராக் சட்டமன்றமும் கலைக்கப்பட அம்மாநில சுல்தான் ஒப்புதல் அளித்துவிட்டார். இதைத் தொடர்ந்து பேராக் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை வென்று தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைத்தால், நடப்பு மந்திரி பெசார் சாரனி முகமட் மீண்டும் அந்தப் பதவியில் அமர்வார் என அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி அறிவித்தார்.

பேராக் சட்டமன்றம் மொத்தம் 59 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. 2018 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பல சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினர். அரசியல் கட்சிகளும் தங்களின் கூட்டணிகளை மாற்றிக் கொண்டன.

தற்போது 25 தொகுதிகளை தேசிய முன்னணி கூட்டணி கொண்டிருக்கிறது. ஜசெக 15 தொகுதிகளையும், அமானா 5 தொகுதிகளையும், பெர்சாத்து 4 தொகுதிகளையும், பாஸ் 3 தொகுதிகளையும் பிகேஆர் 3 தொகுதிகளையும், பிபிஎம் என்னும் பார்ட்டி பங்சா மலேசியா 3 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டிருக்கின்றன. ஒரு சட்டமன்ற உறுப்பினர் சுயேச்சையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.