Home இந்தியா திருவனந்தபுரம் மடத்தில் விழா- கடும் எதிர்ப்பை மீறி மோடி கேரளா வருகை

திருவனந்தபுரம் மடத்தில் விழா- கடும் எதிர்ப்பை மீறி மோடி கேரளா வருகை

806
0
SHARE
Ad

modi-narendraதிருவனந்தபுரம், ஏப்ரல்  24- கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வர்காலாவில் சிவகிரி மடம் உள்ளது.

இந்த மடத்தில் வித்யா தேவதை சிலையை நிறுவும் விழா இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும்படி குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. அவரும் விழாவிற்கு வர சம்மதித்துள்ளார்.

மோடிக்கு அழைப்பு விடுத்த சிவகிரி மடத்தின் நிர்வாகிகள் கேரள அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளனர். இவ்விழாவில் பங்கேற்க கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனுக்கு அனுப்பப்பட்ட அழைப்பை அவர் நிராகரித்தார்.

#TamilSchoolmychoice

‘சிவகிரி மடத்துக்கு காவிச்சாயம் பூச நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர்’ என கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பினராய் விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மடத்தின் நிர்வாகிகள், ‘சிவகிரி மடம் அனைத்து தரப்பினரின் வருகையையும் வரவேற்கிறது’ என கூறியுள்ளனர்.

இந்நிலையில், மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்பு நிலவுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் டி.ஜி.பி. தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

சிவகிரி மடத்தின் தலைவரும், ஸ்ரீ நாராயண தர்ம சங்க அறக்கட்டளையின் நிறுவனருமான சுவாமி ரித்தம்பரநந்தா கூறுகையில், ‘மடத்தின் விழாக்களுக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கும் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால், அவர்கள் எங்கள் அழைப்பை புறக்கணித்து விட்டனர். விழாவில் பங்கேற்கவுள்ள மோடிக்கு கேரள அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பது முறையல்ல’ என்று கூறினார்.