Home நாடு “பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கொண்டிருக்கிறது” – அன்வார்

“பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கொண்டிருக்கிறது” – அன்வார்

889
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இதுவரையில் வெளிவந்த அதிகாரத்துவ முடிவுகளின்படி பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி 82 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

இதைத் தொடர்ந்து அடுத்த ஆட்சி அமைக்கத் தாங்கள் பெரும்பான்மை கொண்டிருப்பதாக பக்காத்தான் ஹாரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கிறார். ஆனால் தங்களுடன் எந்தக் கூட்டணி இணையும் என்பது குறித்து அவர் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

மலேசியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரத்துவத் தகவல்களின் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி 51 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணி 22 தொகுதிகளை வென்று அடுத்த மத்திய அரசாங்கத்தையும் – பிரதமரையும் – நிர்ணயிக்கக் கூடிய வலிமையைப் பெற்றுள்ளது.

தேசிய முன்னணி 30 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சபாவின் ஜிஆர்எஸ் கூட்டணி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

வாரிசான் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.