இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நீதியான நியாயமான தீர்வொன்று வழங்கப்படுமானால் தமிழர்கள் அகதிகளாக செல்லும் நிலை உருவாக மாட்டாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை வந்துள்ள ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜுலி மிஷப், ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியின் குடிவரவுத் துறைப்பேச்சாளர் இஸ்கொட மொறிஷன், எல்லைப் பாதுகாப்புத் துறைப் பேச்சாளர் மைக்கல் கீனன் ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசியபோதே கூட்டமைப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் இராணுவ தலையீடு அதிகரிக்கப்பட்டு வருகின்றது. திட்டமிட்ட குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் அச்சமான சூழல் ஏற்பட்டுள்ளது என மேலும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.