
இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பால் விஸ்வரூபம் திரைப்படம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு, இந்த பிரச்சனை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவரும் நிலையில் விஸ்வரூபம் திரைப்படம் நேற்று சில இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த கமல், அமெரிக்காவிலிருந்து உடனடியாக புறப்பட்டு சென்னை வந்தார்.
படம் இணையதளத்தில் வெளியானதால் உடனே திருட்டு விசிடி வெளியாகிவிடும் என்பதால் கமல் தரப்பு சென்னை சைபர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள வீடியோ கடைகளில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் இன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வீடியோ கடையில் பிடிபட்ட பல புதுப்பட விசிடிக்களில் விஸ்வரூபமும் இருந்ததாகத் தெரிகிறது.