Home நாடு ஹிண்ட்ராப் மீதான தடை நீக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது‏- வேதமூர்த்தி வரவேற்பு

ஹிண்ட்ராப் மீதான தடை நீக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது‏- வேதமூர்த்தி வரவேற்பு

721
0
SHARE
Ad

Waytha-Sliderகோலாலம்பூர், ஜன.29- “மலேசிய இந்தியர்கள்  சமூக மற்றும் பொருளாதார துறைகளில் புறந்தள்ளப்பட்டு, தொடர்ந்து பின்னடைவுகளுக்கு வித்திட்ட வரலாற்று பிழைகளுக்கு எதிராக, ஆக்ககரமான நிரந்தர தீர்வுகளை  முன்வைத்து   தொடர்ந்து தைரியமாக குரல் கொடுத்து வந்த ஒரே காரணத்துக்காக, நியாயத்திற்கு புறம்பாக கடந்த நான்கரை ஆண்டுகளாக ஹிண்ட்ராப் இயக்கம் மீது விதிக்கப்பட்ட  தடையை மலேசிய அரசாங்கம் அகற்றியதை நாங்கள் வரவேற்கிறோம்” என ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி அறிக்கை விடுத்திருக்கின்றார்.

தனது அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“தர்ம யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் சல சலப்புகளையும்  , சவால்களையும், துரோகச் செயல்களையும்  மனம் சோர்ந்து போகாமல் துணிவுடனும் அறிவுத் திறத்துடனும் ஹிண்ட்ராப்  எதிர்கொண்டது  .

#TamilSchoolmychoice

உண்மையும் , தர்மமும், நியாயமும் ஒரு நாள் நிச்சயம் வென்றே தீரும் என்ற வேட்கையுடன் அனைத்து ஹிண்ட்ராப் பொறுப்பாளர்களும் ஆதரவாளர்களும் செயல் பட்டு வந்தனர்.

இந்த சோதனையான  காலக் கட்டத்திலும் எங்களுக்கு ஆதரவையும் , ஊக்கத்தையும், தைரியத்தையும் அளித்து எங்களின் இந்த தர்ம போராட்டத்திற்கு தோள் கொடுத்த  மலேசிய இந்தியர்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.

எங்கள் மீதான தடை நீக்கப்படிருப்பதால்  நாங்கள் மேலும் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறோம். இதன் மூலம் எங்களின் தர்ம போராட்டத்தை மேலும் உத்வேகத்துடன் நாங்கள் தொடர்வோம்.”

“ஹிண்ட்ராப் மீது மலேசிய இந்திய சமூகம் வைத்திருக்கும் அசைக்க முடியாத, பிளவில்லாத எதிர்பார்ப்புகளை நாங்கள் முன்மொழிந்திருக்கும் ஐந்தாண்டு கால செயல் திட்டத்தின் மூலம் அமல் படுத்தி, நம் நெடு நாளைய அவலங்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதே ஹிண்ட்ராபின் அடுத்த இலக்காகும். விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்று கடந்த 56 ஆண்டுகளாக நாம் இழந்ததை மீட்க வேண்டும்” என்றும்  ஹிண்ட்ராப் தலைவர்  வேதமூர்த்தி மேலும் கூறினார்.

“இப்போது ஏற்ப்படிருக்கும் இந்த சூழல் குறித்து விவாதிக்கவும், முடிவெடுக்கவும் ஹிண்ட்ராப் பொறுப்பாளர்கள் விரைவில் ஒன்று கூட இருக்கிறார்கள். இந்த  சந்திப்பின் போது மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்க்க கூடிய  வழி வகைகளை விவாதிக்க ஹிண்ட்ராப் இயக்கத்துடன் விவாதிக்க  பிரதமர் விட்டிருக்கும் அழைப்பு குறித்தும் முடிவெடுக்கப்படும்” என்றும் தனது அறிக்கையின் வழி வேதமூர்த்தி தெரிவித்திருக்கின்றார்.