Home அரசியல் பிரதமரை மக்கள் விரும்புகின்றனர் – ஆனால் ம.இ.கா.வை அல்ல

பிரதமரை மக்கள் விரும்புகின்றனர் – ஆனால் ம.இ.கா.வை அல்ல

649
0
SHARE
Ad

Najib-2---Sliderகோலாலம்பூர்,ஜன.29- எந்த பிரதமரும் இதுவரை செய்யாத அளவுக்கு இந்தியர்களின் நலனின் அக்கறை காட்டி வரும் பிரதமர் நஜிப்பை இந்தியர்கள் விரும்புகின்றார்கள், ஆனால் ம.இ.கா.வை அல்ல என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் அணுகுமுறை உள்ளிட்ட இந்தியர்களுக்கு அவர் ஆற்றி வரும் பல அரிய திட்டங்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில்  இருப்பதாகவும் அவர்கள் மலேசியன் இன்சைடர் இணையப் பத்திரிக்கை மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

ஒரே மலேசியா உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 500 வெள்ளி போன்ற பல அரிய திட்டங்களை நாட்டு மக்களின் நன்மைக்காக பிரதமர் அறிவித்திருக்கும் அதே வேளை, போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் எம்.ஆர்.டி.போன்ற பெருந்திட்டங்களை அவர் உருவாக்கி வருகிறார்.

#TamilSchoolmychoice

ஆனால் ம.இ.கா. இந்தியர்களை காக்க தவறி விட்டதாகவும், ஓர் காலனித்துவ ஆட்சியை இன்றளவும் அந்த கட்சி நடத்தி கொண்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும் மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். அதை விடுத்து புத்ரா ஜெயாவை கைப்பற்றுவது மட்டும் அவர்கள் நோக்கமாக இருக்கக் கூடாது என்றும் பொது மக்களில் சிலர் தைப்பூச விழாவின் போது தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.