சொந்த அரசியல்ஆதாயங்களுக்காக இத்திரைப்படம் வெளிவரக்கூடாது என்றும், சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கேட்ட தொகைக்கு நடிகர் கமல்ஹாசம் தர மறுத்ததால் அவரை பழி வாங்கும் படலமாக இது அமைந்திருக்கிறது என்றும் வேள்பாரி தெரிவித்தார்.
நமது நாட்டின் தணிக்கை வாரியம் அனுமதித்த பின்பே விஸ்வரூபம் திரைப்படம் வெளியானதாகவும், அப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருந்திருந்தால் எவ்வாறு தணிக்கை வாரியம் அனுமதி அளித்திருக்கும்.
இப்பிரச்சினையை தீர்க்க உள்துறை அமைச்சர் ஹிஷாமுடினும் அவரது அதிகாரிகளும் இத்திரைப்படத்தை காண வேண்டும் என்றும், அதன் பின் விஸ்வரூபம் திரைப்படத்தில் என்ன சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கின்றன என்பதையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
அதை விடுத்து ஒரு சிலரின் அரசியல் ஆதாயத்திற்கு நாம் உடந்தையாக இருக்க வேண்டாம் என்றும் வேள்பாரி கேட்டுக் கொண்டார்