ஐதராபாத், ஏப்ரல் 24- பிரபல சினிமா பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
‘16 வயதினிலே’ படத்தில் பாடிய ‘செந்தூரப் பூவே செந்தூரப்பூவே ஜில்லென்ற காற்றே’ என்ற பாடலுக்கு இவருக்கு சிறந்த பாடலுக்கான தேசிய விருது கிடைத்தது. ‘தேவர் மகன்’ படத்தில் இடம் பெற்ற ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலுக்காகவும் இதே விருதை பெற்றார்.
எஸ்.ஜானகிக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம பூஷன் விருது அளித்து கவுரவித்தது. ஆனால் அதை ஏற்று ஜானகி மறுத்து விட்டார். எஸ்.ஜானகியின் 75-வது பிறந்தநாளை நேற்று அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் கொண்டாடினர். எஸ்.ஜானகி இதில் பங்கேற்று ‘கேக்’ வெட்டினார்.
எஸ்.ஜானகி மகன் முரளி கிருஷ்ணா மற்றும் உறவினர்கள், திரையுலகினர் பங்கேற்று எஸ்.ஜானகிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.