Home கலை உலகம் இசைக்கச்சேரிகளில் இருந்து ஜானகி ஓய்வு!

இசைக்கச்சேரிகளில் இருந்து ஜானகி ஓய்வு!

837
0
SHARE
Ad

janakiமைசூர் – தனது மந்திரக் குரலால், உலகெங்கிலும் ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (வயது 79), நேற்று சனிக்கிழமை மைசூரில் நடைபெற்ற இசைக்கச்சேரியில், இது தான் தனது கடைசி நிகழ்ச்சி என அறிவித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

சினிமாவில் பாடப்போவதில்லை என சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவெடுத்த ஜானகி, அதன் பின்னர், கச்சேரிகளில் பாடி வந்தார்.

இந்நிலையில், இனி கச்சேரிகளிலும் பாடப்போவதில்லை என்றும், ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுக்கப் போவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

என்றாலும், ஏற்கனவே தான் பாடிக் கொடுத்த சில பாடல்கள் தற்போது வெளியாக வாய்ப்பு இருப்பதையும் ஜானகி பேட்டி ஒன்றில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

கடந்த 1957-ம் ஆண்டு பாடத் தொடங்கிய ஜானகி, தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம் என மொத்தம் 17 மொழிகளில் சுமார் 48,000 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி மாநில அளவிலான பல விருதுகளை ஜானகி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.