Home நாடு டான்ஸ்ரீ சுப்ரா சொற்போர்: “சங்கத் தமிழ்” குழு வெற்றி பெற்றது

டான்ஸ்ரீ சுப்ரா சொற்போர்: “சங்கத் தமிழ்” குழு வெற்றி பெற்றது

1182
0
SHARE
Ad

Tan Sri-Subra-debate-final-29102017 (7)கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் சொற்போர் போட்டியின் இறுதிச் சுற்றில் ‘சங்கத் தமிழ்’ என்ற பெயர் கொண்ட குழு முதல் வெற்றியாளராக வெற்றி பெற்று 10 ஆயிரம் ரிங்கிட் பரிசுப் பணத்தையும், வெற்றிக் கிண்ணத்தையும் பெற்றது.

செடிக் எனப்படும் பிரதமர் துறையின் இந்தியர்களுக்கான சமூக, பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் ஆதரவோடும், ஓசை அறவாரியத்தின் ஒத்துழைப்போடும், மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த சொற்போர் மாநில வாரியாக நடத்தப்பட்டு, அதன் இறுதிச் சுற்று இன்று நடைபெற்றது.

Tan Sri-Subra-debate-final-29102017 (2)
இறுதிச் சுற்று சொற்போர் போட்டியைக் கண்டு இரசிக்கும் செடிக் தலைமை இயக்குநர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன், டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, டத்தோ சுந்தர் சுப்ரமணியம், டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா, புவான்ஸ்ரீ தீனா சுப்பிரமணியம், டத்தோ எம்.சரவணன்…

சொற்போரின் இறுதிச் சுற்றுக்கான நிகழ்ச்சிக்கு மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சிறப்பு வருகையளித்து, சிறப்புரையாற்றியதோடு, பரிசுகளையும் எடுத்து வழங்கினார்.

#TamilSchoolmychoice

முதல் பரிசை ‘சங்கத் தமிழ்’ என்ற பெயர் கொண்ட குழு பெற்றது. இரண்டாவது பரிசையும் அதற்கான 5 ஆயிரம் ரிங்கிட் பரிசுப் பணத்தையும் ‘புத்திரா’ என்ற பெயர் கொண்ட குழு பெற்றது.

மூன்றாவது பரிசையும் அதற்கான 3 ஆயிரம் ரிங்கிட் பரிசுப் பணத்தையும் ‘கோ.சா.’ என்ற பெயர் கொண்ட குழு பெற்றது.

நான்காவது பரிசையும் அதற்கான 2 ஆயிரம் ரிங்கிட் பரிசுப் பணத்தையும் ‘ஈழர்’ என்ற குழு வென்றது.

Tan Sri-Subra-debate-final-29102017 (4)
சிறப்புரையாற்றும் டாக்டர் சுப்ரா

Tan Sri-Subra-debate-final-29102017 (1)

Tan Sri-Subra-debate-final-29102017 (6)Tan Sri-Subra-debate-final-29102017 (8)