அன்வார் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

    311
    0
    SHARE
    Ad

    கோலாலம்பூர் : அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கைத் தீர்மான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

    நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் தனது பெரும்பான்மையை அன்வார் இப்ராகிம் நிரூபித்துள்ளர்.

    தீர்மானத்தின் மீதான வாக்களிப்பு – குரல் வாக்கெடுப்பு மூலம் நிர்ணயிக்கப்பட்டதால்  – அவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் கொண்டிருக்கிறாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

    #TamilSchoolmychoice

    இருப்பினும்  நாடாளுமன்ற அவைத் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்ற ஜோஹாரி அப்துல் 147 வாக்குகளைப் பெற்றிருப்பதை வைத்து அன்வாரின் ஆதரவு இதுவென நாம் நிர்ணயிக்க முடியும்.

    மூன்றில் இரண்டு நாடாளுமன்றப் பெரும்பான்மைக்கு 148 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் – தற்போது 147 உறுப்பினர்களின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கிறார் என நாம் முடிவு செய்து கொள்ளலாம்.

    அன்வாரை ஆதரிக்கும் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் உடன்பாட்டு ஒப்பந்தம் காரணமாக, அன்வாரின் தலைமைத்துவத்திற்கும் அரசாங்கத்திற்கும் இப்போதைக்கு ஆபத்தில்லை என்றே கருதப்படுகிறது.