Home நாடு பி-40 சமுதாயத்தினருக்கும், தனித்து வாழும் தாய்மார்களுக்கும் இலவச டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை

பி-40 சமுதாயத்தினருக்கும், தனித்து வாழும் தாய்மார்களுக்கும் இலவச டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை

433
0
SHARE
Ad

பி-40 சமுதாயத்தினருக்கும், தனித்து வாழும் தாய்மார்களுக்கும் இலவச டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை

கோலாலம்பூர் : டிஸ்லெக்சியா மீதான சிறப்புப் பயிற்சிப் பட்டறை தேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தால் எதிர்வரும் 7, 8 ஜனவரி 2023-ஆம் தேதிகளில் நடத்தப்படவிருக்கிறது. காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை ஜாலான் டெக்னோலோஜி 5, தாமான் டெக்னோலோஜி மலேசியா, 57000 கோலாலம்பூர் என்ற முகவரியில் உள்ள ஆசியா பசிபிக் பல்கலைக்கழகத்தில் இந்தப் பயிற்சிப் பட்டறை நடைபெறும்.

முழுக்க ஆங்கில மொழியில் இந்தப் பயிற்சிப் பட்டறை நடத்தப்படும்.

முனைவர் முல்லை இராமையா
#TamilSchoolmychoice

பி-40 என்னும் பிரிவைச் சேர்ந்த  மக்களுக்காக, குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்களுக்காகவும் இந்தப் பயிற்சிப் பட்டறை இலவசமாக நடத்தப்படுகின்றது. இதில் கலந்து கொள்ள முன்கூட்டியே பதிவு செய்யும் முதல் 40 பேர்கள் கட்டணமின்றி இலவசமாக கலந்து கொள்ள முடியும் என்பதோடு அவர்களுக்கான டிஸ்லெக்சியா ஒலி வழி கற்பித்தல் முறைக்கான உபகரணப் பேழையும் இலவசமாக வழங்கப்படும்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.கணபதி ராவ் ஆதரவில் நடைபெறும் இந்தப் பயிற்சிப் பட்டறையை தேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் தலைவர் முனைவர் முல்லை இராமையா நடத்துவார்.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்:

மாலா: 013-6447221; சுபா : 012-2058803