Home நாடு டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை

டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை

778
0
SHARE
Ad

டிஸ்லெக்சியா மீதான பயிற்சிப் பட்டறை ஒன்று எதிர்வரும்  3, 4 செப்டம்பர் 2022 தேதிகளில் இருநாட்களுக்கு காலை 9.30 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரையில் கீழ்க்காணும் முகவரியில் நடத்தப்படும்:

நிகழ்ச்சி மண்டபம், ஸ்ரீ வங்சாரியா,
ஜாலான் ஆரா, பங்சார்,
59100 கோலாலம்பூர்

பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான இந்தப் பயிற்சிப் பட்டறை ஆங்கிலத்தில் நடத்தப்படும்.

#TamilSchoolmychoice

இந்தப் பயிற்சிப் பட்டறையின் கற்பிக்கும் கட்டமைப்பு முறை, அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவாகவும், எளிமையாகவும் அமைந்திருக்கும். டிஸ்லெக்சியா மூலம் ஏற்படக் கூடிய மாற்றங்கள் வெளிப்படையாகவும் இந்தப் பயிற்சிப் பட்டறையில் விளக்கப்படும்.

இதுவரையில் இத்தகையப் பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் இந்தப் பயிற்சிப் பட்டறை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகத் தெரிவித்திருக்கின்றனர். இந்தப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு கற்பிக்கும் சான்றிதழ் ஒன்று வழங்கப்படும். இந்த சான்றிதழ், பட்டறையில் கலந்து கொண்டவர்கள் பள்ளிகளிலோ, அல்லது ஆசிரியர் பணிகள் தேவைப்படும் இடங்களிலோ வேலை வாய்ப்பு பெறுவதற்கு பயனாக அமையும்.

இந்தப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு ஒலி வழி கற்பித்தல் முறைக்கான உபகரணப் பேழையும் வழங்கப்படும். இந்த உபகரணப் பேழையை நேரடியாக வகுப்பறைகளுக்குக் கொண்டு சென்று அதனைக் கொண்டு  கற்பிக்க முடியும்.

டியூஷன் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்களுக்கும் இந்தப் பயிற்சிப் பட்டறை மிகவும் பயனுள்ளதாக அமையும்.