Home நாடு ஆங்கிலத்தில் டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை

ஆங்கிலத்தில் டிஸ்லெக்சியா பயிற்சிப் பட்டறை

640
0
SHARE
Ad

கோலாலம்பூர் : வாசிக்க எழுத இயலாத மாணவர்கள் ஆயிரக் கணக்கில் நம் பள்ளிகளில்  உள்ளனர். அவர்களுக்கு ஏற்ற முறையில் ஆங்கிலப் பாடங்களை கற்பிக்க பிரத்தியேமான ஒரு பயிற்சி பட்டறை மலேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தால் இம்மாதம் ஜூன் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் காலையில் ஒன்பதிலிருந்து மாலை 5 மணி வரை நடத்தப் படுகிறது.

முனைவர் முல்லை இராமையா

இந்தப் பயிற்சிப் பட்டறையில் ஒலி வழி  கற்பித்தல் முறைக்கான உபகரணப் பேழையும் வழங்கப்படும். இந்தப் பயிற்சியை, இந்தத் துறையில் நீண்டகால ஆராய்ச்சிகள் செய்தவரும் பரந்த அனுபவமும் கொண்டவரான முனைவர் முல்லை இராமையா முழுமையாக நடத்துவார். பயிற்சிக்குப் பின்னும், கலந்து கொள்வோர் எதிர்நோக்கும்  பிரச்சனைகளுக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை நல்குவார்.

தமிழ் பள்ளிகளில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு இது ஒர் அரிய வாய்ப்பு.  தவற விட்டுவிடாதீர்கள்!

#TamilSchoolmychoice

இந்நிகழ்ச்சி தொடர்பான விவரங்களுக்கு பரிமளாவை தொடர்பு கொள்ளுங்கள். கைப்பேசி எண்: 013-6447221.

பயிற்சி நடைபெறும் முகவரி: Banquet Hall , Sriwangsaria , Jalan Ara , Bangsar 59100 Kuala Lumpur