Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ‘ராப் போர்க்களம்’ சீசன் 2 ஜூன் 4 முதல் தொடங்குகிறது

ஆஸ்ட்ரோ : ‘ராப் போர்க்களம்’ சீசன் 2 ஜூன் 4 முதல் தொடங்குகிறது

622
0
SHARE
Ad

  • உள்ளூர் ராப் போட்டியான ‘ராப் போர்க்களம்’ சீசன் 2 ஜூன் 4 முதல் ஆஸ்ட்ரோ விண்மீனில் (அலைவரிசை 202) ஒளிப்பரப்பாகிறது

கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக ஜூன் 4, இரவு 9 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணும் உள்ளூர் தமிழ் ராப் போட்டியான ராப் போர்க்களம்  சீசன் 2 நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

#ராப் இசைத் தொடரும் என்றக் கருப்பொருளுடன் மலரும் இந்நிகழ்ச்சி, ஆர்வமுள்ள உள்ளூர் ராப்பர்கள் இத்தளத்தின் மூலம் அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் தங்களின் கனவுகளை அடையவும் வாய்ப்புகளை வழங்குகிறது. ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் ராப் போர்க்களம்  சீசன் 2 நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து (ஸ்ட்ரீம்) பார்த்து மகிழலாம்.

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் இந்த நிகழ்ச்சி குறித்துக் கூறுகையில், “அதிகத் தரமான உள்ளூர் உள்ளடக்கத் துறையில் நாங்கள் தொடர்ந்து வெற்றிகரமாகப் பீடுநடைப் போடுவதால், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற உள்ளடக்கத்தை வழங்கப் பல்வேறு உள்ளூர் திறமைகள் மற்றும் தயாரிப்புக் குழுக்களுடன் இணைந்துப் பணியாற்ற நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம். ராப் போர்க்களம் சீசன் 1-இன் வெற்றியைத் தொடர்ந்து, இரசிகர்கள் உற்சாகமானச் சீசன் 2-ஐ எதிர்ப்பார்க்கலாம். இந்தச் சீசனில் உள்ளூர் தமிழ் ராப் ஜாம்பவான், யோகி பி பிற உள்ளூர் ராப்பர்களுடன் இணைந்து 20 போட்டியாளர்களின் பயணத்திற்க்கு வழிக்காட்டுவார்” எனத் தெரிவித்தார்.

பிரபல உள்ளூர் ராப்பரான எம்சி ஜெஸ் ராப் போர்க்களம்  சீசன் 2-ஐத் தொகுத்து வழங்குவார். அவர் தனது ஆக்கப்பூர்வமான ஆற்றலைக் கொண்டு இரசிகர்களைக் கவர்ந்திழுப்பார். உள்ளூர் திறமையாளர்களானச் செயின்ட் டிஎஃப்சி மற்றும் ஷீசே ஆகியோர் வழிக்காட்டும் சீசன் 2-இன் 20 போட்டியாளர்களுக்கு வாடிக்கையாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள்.

சுமார் 13 வாரப் போட்டியின் காலக்கட்டத்தில் போட்டியாளர்கள் உள்ளூர் தமிழ் ராப் ஜாம்பவான், யோகி பி மற்றும் பிரபல உள்ளூர் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான நவின் நேவிகேட்டர் உள்ளிட்ட நடுவர்கள் குழுவால் வழிநடத்தப்படுவர்.

நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், பிரபலங்கள் வாராந்திரச் சிறப்பு நடுவர்களாகத் தோற்றமளிப்பதையும் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம். பல வருட அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்ட இந்நடுவர்கள், அதிகச் செயல்திறன் தரத்தை அடையப் போட்டியின் போதுப் போட்டியாளர்களைக் கடினமாக உழைக்கத் தூண்டுவதோடுப் போட்டியாளர்கள் தங்களைச் சவால் செய்யவும் வித்திடுவர். சீசன் 1-இல் இடம் பெற்ற உள்ளூர் டிஜேக்களான, டிஜே நெக்ஸ்டோ மற்றும் டிஜே டான்ஸ் ஆகியோர் மீண்டும் சீசன் 2-இல் இடம் பெறுவர்.

முதல் நிலை  வெற்றியாளர் 20,000 ரிங்கிட் ரொக்கப் பரிசையும், இரண்டாம் நிலை வெற்றியாளர் 10,000 ரிங்கிட் ரொக்கப் பரிசையும், மூன்றாம் மற்றும் நான்காம் நிலை வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் தலா 2,000 ரிங்கிட் ரொக்கப் பரிசையும், மற்றும்  ஐந்தாம் நிலை வெற்றியாளர் 1,000 ரிங்கிட் ரொக்கப் பரிசையும் தட்டிச் செல்வர்.

ஒவ்வொரு சனி, இரவு 9 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணும் ராப் போர்க்களம்  சீசன் 2-இன் புதிய அத்தியாயங்களை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) மற்றும் ஆஸ்ட்ரோ கோ ஆகியவற்றில் கண்டுக் களிக்கலாம் அல்லது எப்போது வேண்டுமானாலும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.

ராப் போர்க்களம்  சீசன் 2-ஐப் பற்றிய மேல் விபரங்களுக்கு astroulagam.com.my/RapPorkalamS2 எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.